Header Ads



வெளிவிவகார அமைச்சின் சகல, அலகுகளையும் ஒரே கட்டடத்தில் நிறுவ திட்டம்


வெளிவிவகார அமைச்சின் அனைத்து அலகுகளையும் ஒரு கட்டடத்தில் நிறுவுவதற்கு அரசாங்கம் நடவடிக்கை மேற்கொள்ள உள்ளது.

தற்போது வெளிவிவகார அமைச்சு இயங்கி வருகின்ற கட்டடத்தில் போதுமானளவு இடவசதி இன்மையால் குறித்த அமைச்சின் சில அலகுகள் தலைமைக் காரியாலயத்திற்கு வெளியே சில இடங்களில் நடத்திச் செல்லப்படுகின்றன.

இதன் காரணமாக, பல்வேறு நிர்வாகப் பிரச்சினைகளுக்கு முகங்கொடுக்க நேரிட்டுள்ளது.

அத்துடன், சமகாலத் தேவைகளுக்குப் பொருத்தமான வகையில் வெளிவிவகார அமைச்சுக்கு போதியளவு வசதிகளுடன் கூடிய கட்டிடமொன்று நிர்மாணிக்க வேண்டிய தேவை கண்டறியப்பட்டுள்ளது.

அதற்கமைய புதிய கட்டிடத்தை நிர்மாணிப்பதற்குத் தேவையான காணியை ஒதுக்கிக் கொள்வதற்கு, வெளிவிவகார அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை உடன்பாடு தெரிவித்துள்ளது.

1 comment:

  1. பழைய வௌிநாட்டு அமைச்சுக் கட்டடம் பல ஆயிரம் கோடி டொலர்கள் பெறுமதியானது.இப்போது அதனை எவ்வளவுக்கு விற்பனை செய்யப்படுகின்றது. அதில் எவ்வளவு பங்குதாரர்களுக்கு கொமிஷன் போகிறது என்பதை அறிந்து கொள்ள பொதுமக்கள் ஆவலோடு எதிர்பார்த்திருக்கின்ற அதேநேரம் இந்த கட்டடத்தை யாருக்கும் விற்பதற்கும் இந்த நாட்டு மக்கள் அனுமதிப்பதில்லை என்பதையும் அறியத் தருகின்றோம்.

    ReplyDelete

Powered by Blogger.