Header Ads



தலையெழுத்தை எண்ணி மிகுந்த வேதனை, நினைத்துப் பார்த்தால் கட்டிலிலிருந்து எழும்புவதற்கு கூட மனம் வரவில்லை - சந்திரிக்கா


ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சிக்கு தற்போது ஏற்பட்டிருக்கும் தலையெழுத்தை எண்ணி மிகுந்த வேதனை அடைவதாகத் தெரிவித்துள்ள முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க, இக்கட்சி தற்போது மிகவும் பலவீனமடைந்துள்ளது என்றார்.

ஸ்ரீ லங்கா சுதந்திரக்கட்சியின் 70ஆவது ஆண்டு நிறைவு தொடர்பில் தனது பேஸ்புக்கிலேயே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். தொடர்ந்து தெரிவித்துள்ள அவர்,

தான் வளர்ந்து, வாழ்ந்த ஸ்ரீ லங்கா சுதந்திரக்கட்சியை தற்போதைய கட்சித் தலைவர்கள்

சிதைத்துள்ளதை மிகவும் வேதனையுடன் நோக்குவதாகத் தெரிவித்துள்ள அவர்,உண்மையான பண்டாரநாயக்க கொள்கையுடன் ஸ்ரீ லங்கா சுதந்திரக்கட்சியை அழிக்கும் சதியிலிருந்து மீட்டு, பலமிக்கதாக முன்னோக்கி கொண்டு செல்ல தலைமைத்துவத்தை ஏற்று, நாடு முழுவதும் இருக்கும் உண்மையான கட்சியின் ஆதரவாளர்கள் சகலருக்கும் அழைப்பு விடுப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

இலங்கையில் அதிக காலம் ஆட்சியிலிருந்தது மாத்திரமின்றி சிறந்த நல்ல விடயங்களை

நாட்டுக்காக செய்த கட்சியும் தமது கட்சி என தெரிவித்துள்ள அவர், ஆனால், தற்போது கட்சிக்கு ஏற்பட்டுள்ள தலையெழுத்து குறித்து மிகுந்த மனவேதனை அடைவதாகத் தெரிவித்துள்ளார்.

அதை நினைத்துப் பார்த்தால் கட்டிலிலிருந்து எழும்புவதற்கு கூட காலையில் மனம் வரவில்லை என்றார். தானும் இந்த நிலைக்கு பொறுப்பு கூற வேண்டியவள் என சில சந்தர்ப்பங்களில் நினைப்பதுண்டு என தெரிவித்த அவர்,தான் செய்த செயல்களால் அல்ல. தான் செய்யாத வேலைகளால் பொறுப்புக் கூற வேண்டியவளாக உள்ளேன் என்றார்.

9 வருடங்கள் தான் அரசியலிலிருந்து விலகி, வேறு நடவடிக்கைகளில் ஈடுபட்ட போது, 2007ஆம் ஆண்டிலிருந்து தன்னை வா,வா என அழைத்த போதும் தான் முடியாது என மறுதத்தாகவும் ஆனாலும் நாட்டுக்காகவும் கட்சியை கட்டியெழுப்புவதற்காகவும் பாரிய கனவுடன் 2015ஆம் ஆண்டு அரசியலுக்குள் நுழைந்ததாக தெரிவித்தார்.

உயிருடன் இருக்கும் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சிக்கு தலைமைத்துவம் வழங்கக் கூடிய ஒரே

பண்டாநாயக்கவை இல்லாது ஒழிக்கும் கட்சியை அழிக்கவும் முயற்சிகள் எடுக்கப்பட்டன.

ஆனால், இந்த கட்சியை முழுயமையாக அழிக்க எவராலும் முடியாது. பலமிக்க கொள்கையுடைய யாராலும் அழிக்க முடியாது.

No comments

Powered by Blogger.