Header Ads



ஜனாதிபதி - பிரதமர் எடுக்கும் தீர்மானங்கள், அரசாங்கத்தில் உள்ள சில முட்டாள்களினால் பலவீனமடைகிறது


ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோர் எடுக்கும் தீர்மானங்கள்  அரசாங்கத்தில் உள்ள ஒரு சில அமைச்சர்களின் முட்டாள்தமான செயற்பாடுகளினால் பலவீனமடைவதாகத் தெரிவித்துள்ள பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர, பாதுக்க பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி விவகாரத்தில் எவ்வித அரசியல் தலையீடும் காணப்படவில்லை. ஜகத்குமாரவே, அரசியல் ரீதியில் அழுத்தம் பிரயோகித்தார் என்றார்.

பாராளுமன்ற உறுப்பினர் ஜகத் குமார கடந்த 17 ஆம் திகதி இடம் பெற்ற ஊடக  சந்திப்பின் போது அமைச்சர் சரத் வீரசேகர தொடர்பில் குற்றஞ்சாட்டினார். இக்குற்றச்சாட்டு தொடர்பில்

பதிலளிக்கும் போதே, பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர, மேற்கண்டவாறு தெரிவித்தார்.

 பாராளுமன்ற உறுப்பினர்  ஜகத் குமார சுமத்தியுள்ள குற்றச்சாட்டுக்கள் அடிப்படையற்றவை பாதுக்க பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி மீது சுமத்தப்பட்டிருந்த குற்றச்சாட்டின்அடிப்படையிலே அவருக்கு இடம்மாற்றம் வழங்கப்பட்டது.

பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சின் ஆலோசனைக்கு அமையவே  பொலிஸ்மா அதிபரால்

அவருக்கு இடமாற்றம் வழங்கப்பட்டது.இதற்கும் எனக்கும் எவ்வித தொடர்பும் கிடையாது.

பாதுக்க பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியாக தனக்கு நெருக்கமானவர் ஒருவரை நியமிக்குமாறு பாராளுமன்ற உறுப்பினர் ஜகத் குமார தன்னிடம் உத்தியோகப்பூர்வமாக கோரிக்கை விடுத்தார்.

 பொலிஸ்மா அதிபரின் ஆலோசனைக்கு அமைய பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியை

நியமிக்கும் அதிகாரம்  பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளருக்கு உண்டு என அரச

சேவைகள் ஆணைக்குழு தெளிவாக குறிப்பிட்டுள்ளது.

பாதுக்க பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி விவகாரத்தில் எவ்வித அரசியல் தலையீடும்

கிடையாது. அரசியல் அழுத்தத்தை பாராளுமன்ற உறுப்பினர் ஜகத் குமாரவே

பிரயோகித்தார்.இவருக்கு ஆதரவானவரை நியமிக்காததன் காரணமாக பொய்யுரைக்கிறார்.

ஆகவே இவருக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கையினை முன்னெடுக்குமாறு  ஸ்ரீ லங்கா

பொதுஜன பெரமுனவிடம் உத்தியோகப்பூர்வமாக வலியுறுத்தியுள்ளேன் என்றார்.

No comments

Powered by Blogger.