Header Ads



கத்தோலிக்க திருச்சபை, மல்கம் ரஞ்சித் மீது ஞானசாரர் விமர்சனம்


உயிர்த்த ஞாயிறு தாக்குதலுடன் தொடர்புடையவர்களை கண்டுபிடித்து அவர்களை சட்டரீதியாக தண்டிக்கும் அரசாங்கத்தின் முயற்சிகளிற்கு கத்தோலிக்க திருச்சபையும் கர்தினாலும் தடைகளை ஏற்படுத்துகின்றனர்  என ஞானசார தேரர் தெரிவித்துள்ளார்.

சீனாவிடம் கொழும்பு துறைமுக நகரம் வழங்கப்பட்ட பின்னர் சங்கிரிலாவில் இரண்டு குண்டுகள் வெடித்தன என தெரிவித்துள்ள அவர், ஆனால் கர்தினால் இது குறித்து எவரிடமும் பேசவில்லை என ஞானசார தேரர் தெரிவித்துள்ளார்.

இந்த கொள்கைகள் எவ்வாறு வந்தன – எவ்வாறு உருவாக்கப்பட்டன -மேற்குலக நிகழ்ச்சி நிரல் பிராந்திய அரசியல் என்ன மறைகரம் எது அதனை மேற்குலகம் கட்டுப்படுத்துவது  என்பது தெரியாமல் கர்தினால் அரசாங்கத்தின் மீது குற்றம்சாட்டுகின்றார் என ஞானசார தேரர் தெரிவித்துள்ளார்.

ஞாயிறு தற்கொலைக் குண்டுத் தாக்குதல் பிரதான சூத்திரதாரியை கண்டுபிடிக்க முடியாது என பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் தெரிவித்துள்ளார். 

மேற்குலக தேவைகளுக்காக இவ்வாறான தாக்குதல் செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுவதால் தான் இவ்வாறு கூறுவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். 

இஸ்லாமிய அடிப்படைவாத கொள்கைளை மேற்குலகம் தமது தேவைக்கு பயன்படுத்துவதாக தேரர் தெரிவித்துள்ளார்.

No comments

Powered by Blogger.