Header Ads



பொய்யான படத்தால் பாதிக்கப்பட்ட தம்பதி - இவ்வாறான செயல்களில் ஈடுபடாதீர்கள், தாழ்மையுடன் கைக்கூப்பி கேட்கிறோம்


பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய பஹன்துடாவ சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் என சமூகவலைத்தளங்களில் பகிரப்பட்டுவந்த புகைப்படம் போலியானதொன்றென கண்டறியப்பட்டுள்ளது.

இந்த புகைப்படத்திலுள்ள தம்பதியினருடன்  ஹிரு செய்திப்பிரிவு இவ்விடயம் தொடர்பில் வினவியிருந்தது

அதன்போது, இச்சம்பவம் தொடர்பில் தாம் பெரும்  அசௌகரியத்துக்கு உள்ளானதாக அவர்கள் தெரிவித்தனர்.

மீண்டும் இதுபோன்றை செயலில் ஈடுபடவேண்டாம் என சமூகவலைத்தளத்தை உபயோகிப்பவர்களிடம் குறித்த தம்பதியினர் மேலும் கோரியுள்ளனர்.

இது தொடர்பில் அவர்கள் மேலும் தெரிவிக்கையில், "கடந்த 2020 ஆம் ஆண்டு எமது திருமணத்தின்போது, பஹன்துடாவ நீர்வீழ்ச்சிக்கு அருகில் புகைப்படம் எடுத்துக்கொண்டோம். அப்புகைப்படத்தை, ஆபாச சம்பவம் ஒன்றுடன் தொடர்புபடுத்தி சிலர் சமூகவலைத்தளங்களில் பகிர்ந்திருந்தனர்.

அத்துடன், எமது இன்ஸ்டாகிராம் கணக்குகள் தொடர்பான விபரங்களையும் இணையத்தளத்தில் வெளியிட்டு எம்மை பெரும் அசௌகரியத்துக்கு உள்ளாக்கிவருகின்றனர்.

எமது புகைப்படம் சமூகவலைத்தளங்களில் பகிரப்படுவதை அறிந்து, அதனை பகிர்ந்தவர்களிடம் நாம் அவற்றை அகற்றுமாறு கோரினோம். சிலர் உதவிசெய்தனர். எனினும், மேலும் சிலர் தொடர்ந்தும் எம்மை அவமதிப்புக்கு உள்ளாக்கிவந்தனர்.

இதனால், சமூகத்தில் எமக்கு பெரும் அவமானம் ஏற்பட்டுள்ளது. இனியொரு போதும் இவ்வாறான செயல்களில் ஈடுபடவேண்டாம் என அனைவரடத்திலும் தாழ்மையுடன் கைக்கூப்பி வேண்டிக்கொள்கிறோம்" என அத்தம்பதியினர் கேட்டுக்கொண்டுள்ளனர்.

3 comments:

  1. மற்றவர்களை இம்சைப்படுத்தும் செயல்களை இன்றைய இளம் தலைமுறையினர் உடனடியாக நிறுத்த வேண்டும். மனிதர்களின் மானம் மிக முக்கியமானது .என்ன காரணம் கொண்டும் மற்றவர்களை அவமதிக்கும் கேவலப்படுத்தும் செயல்களில் ஈடுபடுவது பாவச் செயல் மட்டுமன்றி மனித சமூகமும் ஒரு போதும் மன்னிக்க மாட்டாது.

    ReplyDelete
  2. நவீன முறையில் இலான அபாண்டம் சுமத்தும் கலையில் தற்போது இலங்கை முதலிடத்தில் அந்த வகையில் இந்த கானொளி உலக சாதனை. வாழ்க மட்டுமே இனி இலங்கையில் தப்பும் போல. அவர்கள் ஆட்சிதானே.

    ReplyDelete
  3. நவீன முறையில் இலான அபாண்டம் சுமத்தும் கலையில் தற்போது இலங்கை முதலிடத்தில் அந்த வகையில் இந்த கானொளி உலக சாதனை. வாழ்க மட்டுமே இனி இலங்கையில் தப்பும் போல. அவர்கள் ஆட்சிதானே.

    ReplyDelete

Powered by Blogger.