Header Ads



பெண்கள், குழந்தைகள், சிறுபான்மையினரை பாதுகாக்குமாறு தலிபான்களிடம் ஐ.நா. பிரதிநிதி நேரில் வலியுறுத்து - BBC


ஐக்கிய நாடுகள் சபையின் மனிதாபிமானப் பணிகள் துறையின் தலைவர் மார்டின் க்ரிஃபித் காபூல் நகரத்தில் தாலிபன் தலைவர்களைச் சந்தித்து, அனைத்து மக்களையும் குறிப்பாக பெண்கள், பெண் குழந்தைகள், சிறுபான்மையினரை பாதுகாக்குமாறு வலியுறுத்தினார்.

தாலிபன் இயக்கத்தை நிறுவியர்களில் ஒருவர் மற்றும் ஆப்கானிஸ்தானின் ஆட்சித் தலைவராக பொறுப்பேற்க உள்ள முல்லா அப்துல் கனி பராதர் உடன் மார்டின் புகைப்படம் எடுத்துக் கொண்டதும் இங்கு குறிப்பிடத்தக்கது.

ஆப்கானிஸ்தானின் மனிதாபிமான உதவிகள் தேவையான மக்களுக்கு கிடைக்கவும், மனிதாபிமான உதவிகளைச் செய்யும் ஆண் மற்றும் பெண் சேவகர்கள் அனைவரும் சுதந்திரமாக நடமாட அனுமதிக்கப்படுவார்கள் என தாலிபன் தலைவர்கள் உறுதியளித்துள்ளதாக ஐக்கிய நாடுகள் சபையின் செய்தித் தொடர்பாளர் ஒருவர் கூறினார்.

ஐக்கிய நாடுகள் சபையின் கணக்குப்படி, ஆப்கனில் சுமார் 1.8 கோடி பேருக்கு மனிதாபிமான உதவிகள் தேவை.

No comments

Powered by Blogger.