Header Ads



நீதி அமைச்சர் மேற்கொள்ளும் தீர்மானங்கள், சமூகத்திற்கு பிரயோசனமாக அமைய ACJU பிரார்த்திக்கின்றது


அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் நிறைவேற்றுக் குழு உறுப்பினர்களும் ஃபத்வாக் குழு உறுப்பினர்களும் கௌரவ நீதி அமைச்சர் அலி சப்ரி அவர்களுடன் கலந்துரையாடல் ஒன்றை நேற்று (2021.09.14 ஆம் திகதி) இரவு 8.15 முதல் 10.00 வரை Zoom ஊடாக நடாத்தினர். இதில் முஸ்லிம் விவாக, விவாகரத்துச் சட்டம் தொடர்பில் மேற்கொள்ளப்பட இருக்கும் மாற்றங்கள் தொடர்பாக பல விடயங்கள் கலந்துரையாடப்பட்டதுடன் அண்மையில் இது தொடர்பில் அமைச்சரவையினால் மேற்கொள்ளப்பட்ட தீர்மானங்கள் பற்றியும் கருத்துக்கள் பரிமாறப்பட்டன. இதில் மார்க்க ரீதியான பல விடயங்கள் பற்றியும் நடைமுறை சார்ந்த பிரச்சினைகள் பற்றியும் கௌரவ நீதி அமைச்சர் அவர்களுடன் கலந்துரையாடப்பட்டது.

இதன் மூலம் சிறந்த பெறுபேறுகள் முஸ்லிம் சமூகத்திற்கு ஏற்பட வேண்டும் என்றும் நீதி அமைச்சர் மற்றும் ஏனைய அதிகாரிகள் மேற்கொள்ளும் தீர்மானங்கள் நாட்டுக்கும் சமூகத்திற்கும் பிரயோசனமாக அமைய வேண்டும் என்றும் எல்லாம் வல்ல அல்லாஹ்விடம் ஜம்இய்யா பிரார்த்திக்கின்றது.


ஊடகப் பிரிவு

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா

15.09.2021

2 comments:

  1. காத்திரமான,மிகவும் சரியான நீதிமன்ற செயற்பாடுகளை எடுத்து அவற்றை முன்னெடுக்க மிகத் திறமையான சட்டத்தரணிகளை தெரிவுசெய்து வழக்கை முன்னெடுத்தவேளையில் தான் பிரார்த்தனை பயன்படும். அதுதவிர பள்ளியில் இமாம் சத்தமிட்டு துஆ கேட்க கேட்பவர்கள் ஆமீன் சொல்லும் படலத்தை உடனடியாக நிறுத்தப்படல் வேண்டும். அது வெறுமனே நேரத்தை வீணாக்குவது மட்டும்தான் என்பதை அனைவரும் விளங்கிக் கொள்ள வேணடும்.

    ReplyDelete
  2. குறைபாடுகளை சுட்டிக்காட்டி காதிநீதிமன்றங்களை ஒழிக்க இடமளிக்கக்கூடாது. குறைபாடுகளை நிவர்த்தி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்

    ReplyDelete

Powered by Blogger.