Header Ads



9/11 தாக்குதல் - அமெரிக்காவுடனான ஒற்றுமையை வெளிப்படுத்த, இலங்கை வெளியிட்டுள்ள அறிக்கை


9/11 தாக்குதல் இடம்பெற்று 20வது ஆண்டு நிறைவில் அமெரிக்க அரசாங்கத்துடனான ஒற்றுமையை வௌிப்படுத்தும் வகையில் இலங்கை வௌிநாட்டு அமைச்சு அறிக்கை ஒன்றை வௌியிட்டுள்ளது. 

குறித்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, 

ஐக்கிய அமெரிக்கா மற்றும் ஏனைய நாடுகளைச் சேர்ந்த பல அப்பாவி மக்களின் உயிர் மற்றும் உடலுறுப்புக்களின் இழப்புக்கு வழிவகுத்த ஐக்கிய அமெரிக்காவின் மீது நடாத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதல்கள் இடம்பெற்று 20 ஆண்டுகள் நிறைவை 2021 செப்டம்பர் 11ஆந் திகதியாகிய இன்றைய தினம் குறித்து நிற்கின்றது. 

ஐக்கிய அமெரிக்காவின் சமகால வரலாற்றில் மிகவும் வேதனையான நிகழ்வை அவர்கள் நினைவுகூரும் இத் தருணத்தில், அமெரிக்க மக்கள் மற்றும் அரசாங்கத்துடனான தனது ஒற்றுமையை இலங்கை அரசாங்கம் வெளிப்படுத்துகின்றது. கொடூரமான இந்தத் தாக்குதல்களில் பாதிக்கப்பட்ட மற்றும் உயிர் பிழைத்த அனைவருக்கும் அஞ்சலி செலுத்துவதற்கு இலங்கை விரும்புகின்றது. 

நீண்ட காலமாக பயங்கரவாதத்தால் பாதிக்கப்பட்டு, அதன் சவாலை வெற்றிகரமாக எதிர்கொண்ட ஒரு நாடு என்ற வகையில், பயங்கரவாதத்தை அதன் அனைத்து வடிவங்களிலும் மற்றும் வெளிப்பாடுகளிலும் ஒழிப்பதற்காக அனைத்து நாடுகளும் ஒன்றிணைவதற்கான தேவையை இலங்கை அரசாங்கம் மீண்டும் வலியுறுத்த விரும்புகின்றது.

3 comments:

  1. அன்று அமெரிக்கா ஆப்கான் ஐ அழித்து சிதைத்துவிட்டது இன்று இலங்கையில் கிழ‌க்கு மண்ணில் கீழ் சாதி அரசியல் வாதிகளையும் புலிகளின் கோரக்கயவர்களையும் ஆட்சி பீடத்தில் ஏற்ற ஏப்ரல் தாக்குதல் அரசாங்கத்திற்கு பேருதவி புரிந்தது. இலங்கை ஐ போல நியூஸீலாந்து மக்களை மடையர்களா மடையர்களாக்க இந்திய இந்து வெறி அரக்கன் களின் தலைவனால் ஒரு போதும் முடியாது.

    ReplyDelete
  2. அன்று அமெரிக்கா ஆப்கான் ஐ அழித்து சிதைத்துவிட்டது இன்று இலங்கையில் கிழ‌க்கு மண்ணில் கீழ் சாதி அரசியல் வாதிகளையும் புலிகளின் கோரக்கயவர்களையும் ஆட்சி பீடத்தில் ஏற்ற ஏப்ரல் தாக்குதல் அரசாங்கத்திற்கு பேருதவி புரிந்தது. இலங்கை ஐ போல நியூஸீலாந்து மக்களை மடையர்களாக்க இந்திய இந்து வெறி அரக்கன் களின் தலைவனால் ஒரு போதும் முடியாது.

    ReplyDelete
  3. அன்று அமெரிக்கா ஆப்கான் ஐ அழித்து சிதைத்துவிட்டது இன்று இலங்கையில் கிழ‌க்கு மண்ணில் கீழ் சாதி அரசியல் வாதிகளையும் புலிகளின் கோரக்கயவர்களையும் ஆட்சி பீடத்தில் ஏற்ற ஏப்ரல் தாக்குதல் அரசாங்கத்திற்கு பேருதவி புரிந்தது. இலங்கை ஐ போல நியூஸீலாந்து மக்களை மடையர்களாக்க இந்திய இந்து வெறி அரக்கன் களின் தலைவனால் ஒரு போதும் முடியாது.

    ReplyDelete

Powered by Blogger.