Header Ads



இலங்கையில் இதுவரை கொரோனாவால் 80 பிரபலங்கள் பலி - சுகாதாரப் பிரிவு


இலங்கையில் கொரோனா தொற்றால் இதுவரை 80 பிரபலங்கள்  உயிரிழந்துள்ளார்கள் என சுகாதாரப் பிரிவு தெரிவித்துள்ளது.

நாட்டில் தொழிலதிபர்கள், அரசியல்வாதிகள், பிரபலங்கள், தொழில் வல்லுநர்கள் மற்றும் கலைஞர்கள் உட்படப் பிரபலமாக இருந்த 80 இற்கும் மேற்பட்ட நபர்கள் கொரோனா தொற்றால் உயிரிழந்துள்ளார்கள் என சுகாதாரப் பிரிவு தெரிவித்துள்ளது.

மேலும் பாடகர்கள், நடிகர்கள் உட்பட பல்வேறு துறைகளைச் சேர்ந்த 300க்கும் மேற்பட்டோர் இதுவரை கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளதாக சுகாதார அமைச்சின் உயர் அதிகாரி ஒருவர் ‘லங்காதீப’வுக்குத் தெரிவித்துள்ளார்.

இதேவேளை கொரோனா தொற்றுக்குள்ளான அமைச்சர் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை 27ஆகும் என சுகாதாரப் பிரிவு தெரிவித்துள்ளது.

கொரோனா தொற்றால் உயிரிழந்த முக்கிய பிரமுகர்களில் முன்னாள் அமைச்சரான மங்கள சமரவீர, முன்னாள் சபாநாயகர் வி.ஜ.மு.லொக்குபண்டார, சைட்டம் பல்கலைக்கழகத்தின் பிரதானி, முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் வைத்தியர் நெவில் பெர்ணான்டோ,கப்பிட்டல் மகாராஜா குழுமத்தின் தலைவர் ஆர். ராஜமகேந்திரன், ஜிப்ஸிஸ் இசைக் குழுவின் தலைவர் சுனில் பெரேரா, இராணுவ பிரிகேடியர் எஸ்.டீ.உதயசேன, விடுதலைப் புலிகள் அமைப்பின் முன்னாள் மொழிபெயர்ப்பாளர் ஜோர்ஜ் மாஸ்டர், மேல் மாகாண முன்னாள் மாகாண சபை உறுப்பினர் டக்லஸ் பெர்னாண்டோ, ராகம வைத்தியசாலை வைத்தியர் கயான் தந்தநாராயண, சட்டத்தரணிகள் நிறுவனத்தின் தலைவர் சட்டத்தரணி கௌரிசங்கரி தவராசா ஆகியோரே இவ்வாறு கொரோனா தொற்றுக் காரணமாக உயிரிழந்துள்ளதாக சுகாதாரப் பிரிவு தெரிவித்துள்ளது. THINAKKURAL

No comments

Powered by Blogger.