Header Ads



கொரோனா ஜனாஸாக்கள் 6 ஆம் திகதிமுதல் கிண்ணியாவில் நல்லடக்கம்


(ஏ.ஆர்.ஏ.பரீல்)

கொவிட் 19 தொற்­றினால் மர­ணிப்­ப­வர்­களின் ஜனா­ஸாக்­களை அடக்கம் செய்­வ­தற்கு கிண்­ணியா வட்­ட­மடு கிரா­மத்தில் 10 ஏக்கர் அரச காணி ஒதுக்­கப்­பட்­டுள்­ளது. இக்­கா­ணியை கொவிட் 19 தொழில்­நுட்ப குழு ஆய்­வு­களை மேற்­கொண்டு சிபா­ரிசு செய்­த­தை­ய­டுத்தே கொவிட் 19 செய­ல­ணி­யி­னாலும் சுகா­தார அமைச்­சி­னாலும் அனு­மதி வழங்­கப்­பட்­டுள்­ளது.

எதிர்­வரும் 6 ஆம் திகதி வட்­ட­மடு கிராம கொவிட் 19 விஷேட மைய­வா­டியில் ஜனா­ஸாக்கள் நல்­ல­டக்கம் செய்யும் பணிகள் ஆரம்­பிக்­கப்­படத் தீர்­மா­னிக்­கப்­பட்­டுள்­ள­தா­கவும், இம்­மை­ய­வா­டியில் சுமார் 4000 ஜனா­ஸாக்கள் நல்­ல­டக்கம் செய்­யப்­ப­டு­வ­தற்­கான இட­வ­ச­தி­யுள்­ள­தா­கவும் கிண்­ணியா பிர­தேச சபைத் தவி­சாளர் கே.எம்.நிஹார் ‘விடி­வெள்­ளி’க்குத் தெரி­வித்தார்.

அவர் தொடர்ந்தும் கருத்து தெரி­விக்­கையில், தற்­போது மைய­வா­டிக்­கான உட்­கட்­ட­மைப்பு வச­திகள் துரித கதியில் மேற்­கொள்­ளப்­பட்டு வரு­கின்­றன. மைய­வா­டிக்குள் 14 பாதைகள் அமைக்கும் பணிகள் இடம்­பெ­று­கின்­றன. மைய­வா­டியைச் சூழ சுமார் 10 கிலோ மீற்றர் மதில் எழுப்­பப்­ப­ட­வுள்­ளது. மின்­சார வச­திகள் மற்றும் ஜனா­ஸாக்­களின் உற­வி­னர்­க­ளுக்­கான வச­திகள் மேற்­கொள்­ளப்­ப­ட­வுள்­ளன.

கிழக்கு மாகாண இரா­ணுவ தள­பதி உட்­பட கொவிட் செய­லணி அதி­கா­ரிகள் இம்­மை­ய­வா­டியை பார்­வை­யி­ட­வுள்­ளனர். ஓட்­ட­மா­வடி மஜ்மா நகர் கொவிட் 19 மைய­வா­டியின் நிலப்­ப­ரப்பு ஜனா­ஸாக்­க­ளினால் பூர­ண­மா­கி­யுள்ள நிலையில் கிண்­ணியா வட்­ட­மடு கிராம மைய­வா­டியை துரி­த­மாக ஏற்­பாடு செய்­யும்­படி கொவிட் செய­லணி வேண்டிக் கொண்­ட­தற்­கி­ணங்க அதன் பணிகள் விரை­வு­ப­டுத்­தப்­பட்­டுள்­ளன என்றார்.

இதே­வேளை புத்­தளம் மற்றும் அம்­பாறை மாவட்­டங்­க­ளிலும் கொவிட் 19 ஜனா­ஸாக்­களை நல்­ல­டக்கம் செய்­வ­தற்கு காணிகள் இனங்­கா­ணப்­பட்­டுள்­ள­தா­கவும் கொவிட் 19 செயலணியின் தொழில்நுட்ப குழு இது தொடர்பில் ஆய்வுகளை நடாத்தி வருவதாகவும் சுகாதார அமைச்சின் கொவிட் 19 ஒருங்கிணைப்பாளரும் தொழில்நுட்ப சேவைகள் இயக்குனருமான டாக்டர் அன்வர் ஹம்தானி தெரிவித்துள்ளார்.- Vidivelli

No comments

Powered by Blogger.