Header Ads



5 பிள்ளைகளின் தாய், அவசர உதவி கேட்கிறார்


بسم الله الرحمن الرحيم

இஸ்லாமிய சகோ/சகோதரிகளே!

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரகாத்துஹு

இவ்வுலகில் வாழும் ஒவ்வொரு முஸ்லிமும் பிற முஸ்லிமின் சகோதரன் என்ற நற்செய்தியை நபி (ஸல்) அவர்கள் குறிப்பிட்டது மாத்திரமின்றி, ஒருவர் மற்றவருக்கு அநீதியிழைக்கக் கூடாது, இழிவுபடுத்தக்கூடாது, நொலை செய்யக்மூடாது....... இவ்வாறு பல விடயங்களைக் குறிப்பிட்டுள்ளார்கள். மேலும், 'ஒரு (முஸ்லிமான) அடியான் சிரமப்படும்போது அவனது சிரமத்திலிருந்து அவனை நீக்க உதவினால், உதவிய மனிதனுக்கு அல்லாஹ் நிச்சயம் உதவுவான்' எனப் பகர்ந்துள்ளார்கள்.

இவ்வுலக வாழ்வில் அல்லாஹ் ஒவ்வொரு மனிதனுக்கும் வழங்கியிருக்கும் 'ஆபியத்' எனப்படும் ஆரோக்கியம் அல்லாஹ்வின் மிகப் பெரும் அருட்கொடையாகும். சொத்து, செல்வம், குடும்பம் என எதனை அனுபவிக்கவும் ஆரோக்கியம் இன்றியமையாதது. 

இங்கு வெலிகமையைப் பிறப்பிடமாகக் கொண்ட ஐந்து பிள்ளைகளின் தாயான 47 வயதைக் கொண்ட ஓர் இளம் தாய் தமது இரு சிறுநீரகங்களும் பழுதடைந்த நிலையில் நல்லுள்ளம் படைத்த தனவந்தர்கள் பரோபகாரிகளிடமிருந்து உதவிக்கரம் நீட்டுகின்றார். சத்திர சிகிச்சை, ஏனைய செலவுகளுக்காக சுமார் 50 இலட்சம் (5 Million) ரூபாய் செலவாகுமென பிரதான வைத்தியரால் பரிந்துறைக்கப்பட்டுள்ளது.

நாம் மனமுவந்து வழங்கும் தர்மம் ஒருபோதும் வீணாகுவதில்லை என்பதைக் கருத்திற்கொண்டு இவ்விக்கட்டாண சூழ்நிலையில் ரிஸ்வியா என்ற எமது சகோதரிக்காக அவரின் கண்ணீரைத்துடைக்க எமக்கு அல்லாஹ் அளித்துள்ள செல்வத்திலிருந்து கொடுத்துதவுவோம். அதற்கான கூலியை அல்லாஹ் நிரப்பமாகத் தருவானாக, ஆரோக்கியமான வாழ்வைத் தருவானாக.


தகவல்: அபூஸஃத் - வெலிகம.

Account Details:

M.I.MOHAMED

(Weligama Branch)

Commercial Bank      

811 20 290 28

Bank of Ceylon

87 837 896

அவர்களின் விபரம்:

M.S.F.RISWIYA

GALBOKKA,

WELIGAMA,

SRI LANKA

Mob: +94 77 43 800 84

         +94 75 36 83 638


4 comments:

  1. If this is the situation of the lady (young mother of 5 kids), she should definitely be on "DIALYSIS".Secondly,there must be a donor offering a kidney for transplant. Thirdly, has this person - அபூஸஃத் - வெலிகம/M.I.MOHAMED of Weligama got the Power-of-Attorney from the patient to fundraise/collect Rs. 5 million on behalf of this lady? What is the guarantee that this is "NOT" a fake appeal for humanitarian assistance of money? The best will be for some kith or kin of the lady patient take her to a government hospital and then get the best medical advice Authenticating her situation. If the need is certified, then www.jaffnamuslim.com can launch a "fundraising campaign" to support the needs, Insah Allah. In that event, I maybe able to get her some valuable medications on donation to be sent to Sri Lanka required by the doctors who will then take care of her, Insha Allah.
    Noor Nizam - Convener "The Muslim Voice".

    ReplyDelete
  2. முதலில் அழ்ழாஹ் விடம் கையேந்தி பிரார்த்தனை செய்து வர வேண்டும்.

    ReplyDelete
  3. May Allah bless you brother Noor Nizam for your tangible remarks and suggestion and extending your helping hand for this lady.

    ReplyDelete
  4. Noor Nizam.
    ஓர் செய்தியின் உண்மைத் தன்மையை சரியாகப் புரியாமல், அறியாமல் கற்பனைகளை எழுதக்கூடாது.
    முதலாவதாக:
    இச்செய்தியை அனுப்பும்போது வைத்தியரின் கடிதம், statement, ஜும்ஆப் பள்ளிமூலம் ஊர்ஜிதப் படுத்தப்பட்ட கடிதம், நியாமி சம்பந்தப்பட்ட விபரங்களை அறிய Address, Mobile என யாவும் jaffnamuslim க்கு அனுப்பப்பட்டு, அவர்கள் சரிபார்த்த பின்பே வெளியிட்டுள்ளார்கள்.
    இரண்டாவதாக:
    நீங்கள் அங்கிருந்து கொண்டு மிக simple ஆக இங்குள்ள gorvament Hospital களில் உள்ள நிலைகள் பற்றி தெரியாமல் குறிப்பிட்டுள்ளீர்கள்.
    மூன்றாவதாக: தற்போது அவர்கள் Dialysis செய்து கொண்டுதான் இருக்கின்றார்கள். அதனை முழுமையாக gorvament Hospital பாரமெடுப்பதில்லை. இது தான் இலங்கையின் நிலை. Private ல் Dialysis செய்வது கூட அவர்களைப் பொறுத்த மட்டில் சிரமம் என்ற நிலையில் தான் இவ்வாறு பதிவு செய்யப்பட்டது.
    நான்காவதாக: இப்படியாக comment எழுத முன் யாரிடமாவது கூறியோ, நேரடியாக அவர்கள் வழங்கியுள்ள mobile இலக்கத்துடன் தொடர்ப்பு கொண்டோ சரியான தகவலை அறிந்திருக்கலாம்.

    இறுதியாக: தில்லு முல்லுகள், ஏமாற்று, மோசடி மூலம் பணம் சம்பாதிக்கும் பலர் சமூகத்தில் இருப்பது உண்மை தான். ஆனாலும் எல்லோரும் அவ்வாறானவர்கள் அல்ல என்பதும் உண்மையே.

    ஆகவே, ஒரு தகவல் பற்றி சந்தேகம் வருவது நியாயம் தான். ஆனால் அதை உறுதி செய்யாமல் தன்னால் உதவ முடியாவிட்டாலும் பிறர் உதவுவதையும் தடுப்பதை தவிர்ந்துகொள்வோம்.

    ReplyDelete

Powered by Blogger.