Header Ads



45 நாட்களில், 4 இலட்சம் ரூபா செலவில், கழிவுப் பொருட்களைக் கொண்டு புதியரக உழவு இயந்திரத்தை கண்டு பிடித்துள்ள கோகுலரஞ்சன்


மட்டக்களப்பு மாவட்டத்தின் மண்முனை தென் எருவில் பற்று பிரசேத்திலுள்ள களுவாஞ்சிக்குடி கிராமத்தைச் சேர்ந்த கண்டுபிடிப்பாளர் தான் கந்தசாமி கோகுலரஞ்சன்.

சிறிய வயதிலிருந்தே தொழில் நுட்பத்துறையில் ஆர்வமான இவர், மத்திய கிக்கு நாடுகளில் கணனி திருத்துனராக தகுந்த வேதனத்திற்கு தொழில் புரிந்து வந்துள்ளார்.

தற்போது வீட்டிலிருந்து கொண்டு பல கம்பனிகளுக்கும், நிறுவனங்களுக்குமுரிய கணனிகளைப் பழுது பார்த்துக் கொடுத்து வருவதாக தெரிவிக்கும் அவர், தற்கால கொவிட் - 19 காலத்தில் கணனி திருத்தும் வேலைகள் குறைவடைந்துள்ளதால் 45 நாட்களில் சுமார் 4 இலட்சம் ரூபா செவு செய்து கழிவுப் பொருட்களைக் கொண்டு புதிய ரக உழவு இயந்திரம் ஒன்றைக் கண்டு பிடித்துள்ளதாகத் தெரிவிக்கின்றார்.

விவசாயக் கிராமத்தில் பிறந்ததாலும், விவசாயத்தில் அதிக நாட்டமுள்ளதாலும், தாம் எவரிடமும் கையேந்தாமல் விவசாயிகளுக்கு புதிய உழவு இயந்திரம் ஒன்றைக் கண்டுபிடிக்க வேண்டும் என்ற நோக்குடன் செயற்பட்டுதான் இவ் உழவு இயந்திரத்தைக் கண்டுபிடித்துள்ளதாகவும், இதற்கு அரச அங்கீகாரம், மற்றும் பதிவுச் சான்றிழ் போன்றவற்றைப் பெற்றுத்தர அரசாங்கம் உதவவேண்டும் எனவும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

கோகுலராஞ்சன் புதிதாக வடிவமைத்துள்ள சிறியரக உழவு இயந்திரத்தை அப்பகுதி மக்கள், மற்றும் விவசாயிகள் அனைவரும் பார்வையிட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.  

No comments

Powered by Blogger.