September 26, 2021

ஷப்ரா - ஷடில்லா ஆகிய பலஸ்தீன அகதி முகாம்களில், இஸ்ரேல் புரிந்த மனிதப் படுகொலைகளின் 39வது ஆண்டு பூர்த்தி


- லத்தீப் பாரூக் -

1982 செப்டம்பரில் இஸ்ரேல் லெபனானுக்குள் ஊடுறுவி அங்கு வான் வழியாகவும் தரை வழியாகவும் கடல் மார்க்கமாகவும் தாக்குதல்களை நடத்தியது. அன்றுஞ மிகவும் பலம்வாய்ந்த அமைப்பாக இருந்த பலஸ்தீன விடுதலை இயக்கத்துக்கு முடிவு கட்ட வேண்டும் என்பதுதான் இந்தத் தாக்குதலின் நோக்கம். ஆனால் அந்த சாட்டில் அங்கிருந்த அகதி முகாம்களில் வாழந்து வந்த ஆயிரக்கணக்கான பலஸ்தீனர்கள் கொல்லப்பட்டனர்.

இந்தப் படுகொலைகளின் வருடாந்த நினைவு கூறல் பற்றி எந்தவொரு மேலைத்தேச ஊடகங்களும் அலட்டிக் கொள்வது இல்லை. காரணம் அவை மேலைத்தேச யுத்த இயந்திரத்தின் அங்கங்களில் ஒன்றாகக் கருதப்படுவதால். செஞ்சிலுவை சங்கத்தின் அறிக்கைப் படி இங்கு சுமார் 14000 பலஸ்தீனர்கள் கொல்லப்பட்டதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் 20000 பேர் காயம் அடைந்துள்ளனர். அது தவிர இன்னும் 100000 பேர் வீடு வாசல்களை இழந்தனர்.

இந்த யுத்தம் பற்றிய செய்திகளை சேகரித்த பிரிட்டிஷ் ஊடகவியலாளர் றொபர்ட் பிஷ்க் தனது பரிதாபத்துக்குரிய தேசம் (Pவைல வாந யேவழைn); எனும் நூலில் கொல்லப்பட்டவர்களில் பெரும்பாலானவர்கள் முஸ்லிம்கள் என்று தெரிவித்துள்ளார். முஸ்லிம் மயான பூமிகள் இறந்த உடல்களால் நிரம்பி வழிந்தன. 30 அடிகள் ஆழமான குழி தோண்டி அவை குவியல் குவியலாகப் புதைக்கப்பட்டன. சிதைவடைந்த உடல்களைப் பார்க்க அருவருப்பாகவும் இருந்தன. 100 பாகை வெப்பநிலையிலும் கூட மனித உடல்களின் துர்நாற்றம் தாங்க முடியாமல் மூக்கை துளைத்தது. எங்களது மனித விழுமியங்கள், அழகு, ஆரோக்கியம், மென்மை, சுத்தம், சுகாதாரம், ஆயுள் என எல்லாமே அங்கு கேள்விக்குள்ளாக்கப்பட்ட நிலையில் இருந்தன என்று கூறுகின்றார்.

அவர்கள் ஏன் இந்த மரணத்தை தழுவினார்கள்? அவ்வாறானதோர் ஒரு அருவருப்பு எவ்வாறு இடம்பெற்றது? என்ற கேள்விகளை எழுப்பியுள்ள அவர் சியோனிஸ ஆக்கிரமிப்பாளர்கள் மேற்கு பேரூட் பிரதேசத்துக்கான நீர் மற்றும் மின் விநியோகங்களைத் தடை செய்தனர். உணவு எடுத்துச் செல்லவும் அனுமதிக்கப்படவில்லை. முஸ்லிம் மக்களுக்காக கொண்டு செல்லப்பட்ட உணவுப் பொட்டலங்களையும்ஈ கூடைகளையும் இஸ்ரேல் படையினர் பறித்து சாக்கடைகளில் எறிந்தனர் என்று மேலும் குறிப்பிட்டுள்ளார்.


வாஷிங்டனிலும், லண்டனிலும், பாரிஸிலும் உள்ள மனித உரிமைக் காவலர்களின் பூரண ஆதரவுடன் சப்ரா மற்றும் ஷடில்லா அகதி முகாம்களில் இஸ்ரேல் அரங்கேற்றிய மூர்க்கத்தனத்தை விளக்கும் ஒரு சிறிய காட்சி

ஆஸ்பத்திரிகளில் இடம்பெற்ற இஸ்ரேலின் கொடூரங்கள் பற்றி பேரூட் ஆஸ்பத்திரியில் பணியாற்றிய டொக்டர் அல்மா ஷாமா 'மேற்கு பேரூட்டில் பொஸ்பரஸ் ஷெல் தாக்குதல்களை சியோனிஸப் படைகள் நடத்திய பின் நான் குழந்தைகளைத் தூக்கி ஒரு கூடைகளில் போட்டு அவற்றின் மீது தண்ணிரை ஊற்றி அவர்கள் மீது தீ பரவாமல் தடுத்தேன். அரை மணிநேரம் கழித்து அவர்களைக் கூடைகளில் இருந்து வெளியே எடுத்த போதும் அவர்களின் உடல்களில் ஆங்காங்கே தீ பற்றிக் கொண்டிருந்தது. பிறகு உயிர் இழந்த நிலையில் ஆஸ்பத்திரி சவச்சாலைக்கு கொண்டு செல்லப்பட்ட பின்னரும் அவர்களி உடல்களில் இருந்து புகை வெளியெறிக் கொண்டிருந்தது' என்று தனது அனுபவத்தைப் பதிவு செய்துள்ளார்.

யூதர்கள் செய்த இந்த அட்டூழியத்தை நாஹும் கோல்ட்மன், பிலிப் கிளட்ஸ் நிக், பியர் மெண்டிஸ் ஆகிய யூத சமூகத்தின் முக்கிய பிரமுகர்களும் இவ்வாறு வர்ணித்துள்ளனர். இந்த விடயத்தில் அமெரிக்காதான் உண்மையான வில்லன். மத்திய கிழக்கில் குழப்ப நிலை ஏற்பட்டமைக்கான பிரதான பொறுப்பை அவர்கள் தான் ஏற்க வேண்டும். அமெரிக்கா இஸ்ரேலுக்கு வழங்கிய இராணுவ மற்றும் பொருளாதார ரீதியான உதவிகள் தான் இதற்கு மக்கிய காரணம் என்று அவர்கள் தெரிவித்துள்ளனர்.

பலஸ்தீன விடுதலை இயக்கம் பேரூட்டில் இருந்து வெளியேற்றப்பட்டது.அந்த இயக்கத்தின் போராளிகளது குடும்ங்களுக்கு பூரண பாதுகாப்பு வழங்கப்படும் என்று அங்கு நிலை கொண்டிருந்த அமெரிக்கத் தூதுவர் பிலிப் ஹபீப் உறுதி அளித்த பின்பே பலஸ்தீனப் போராளிகளுடன் வெளியேற்றத்துக்கான இணக்கம் காணப்பட்டது. ஆனால் பேரூட்டில் இருந்து பலஸ்தீன விடுதலை இயக்க உறுப்பினர்கள் வெளியேறிய பின் இந்த உறுதிகள் அனைத்தும் மரண சாசனங்களாகவே மாற்றப்பட்டன. ஷப்ரா மற்றும் ஷடில்லா அகதி முகாம்களில் தங்கியிருந்த அவர்களது உறவழினர்கள் அனைவரும் கூண்டோடு வேட்டையாடப்பட்டனர்.

இஸ்ரேலியப் படை வீரர்கள் சில பெண்களின் கற்பை சூறையாடிவிட்டு அவர்களை கூரிய ஆயுதங்களால் குத்தியும் சுட்டும் குற்றுயிராக இரத்தம் வழிய வழிய கதற விட்டுச் சென்ற சம்பவங்களும் பதிவாகி உள்ளன. செப்டம்பர் 16க்கும் 18க்கும் இடைப்பட்ட இரு தினங்களில் மட்டும் ஆண்கள், பெண்கள், சிறுவர்கள், மதியவர்கள் என இரண்டாயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் ஷப்ரா மற்றும் ஷடில்லா முகாம்களில் கொல்லப்பட்டனர்.

இந்த சம்பவங்களால் உலகமே அதிர்ச்சி அடைந்தது. ஹிட்லருடைய காலத்தில் மிக மோசமான கொடுமைகளை அனுபவித்ததாகக் கூறப்படும் யூதர்கள் எப்படி இந்தளவக்கு இருதயமற்ற கொலைகாரர்களாகவும் கொடுமைக்காரர்களாகவும் மாற முடியும் என்று உலகம் வியப்படைந்தது. இந்தக் கொடுமைகளின் பிரதான சூத்திரதாரிகள் இருவர். ஒருவர் அன்றைய இஸ்ரேல் பிரதமர் மெனாச்சம் பெகின் மற்றவர் அன்றைய இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சரும் பின்னர் பிரதமர் பதவியை வகித்தவருமான ஏரியல் ஷரோன்.

அந்தக் காலப்பகுதியில் 33 வயதாக இருந்த டொக்டர் சுவீ சாங் ஆங் ஒரு யூத கிறிஸ்தவர். ஷப்ரா ஷடில்லா முகாம்களுக்குள் கால் வைக்கும் வரை பலஸ்தீனர்கள் என்ற ஒரு பிரிவினர் வாழும் விடயம் அவருக்குத் தெரியாது. லண்டனில் இருந்து இதற்கென்றே புறப்பட்டு வந்து அவர் பாதிக்கப்பட்டவர்களை நேரடியாகச் சந்தித்தார்.

டொக்டர் சுவீ சாங் ஆங்

அவர் தனது அனுபவத்தை இவ்வாறு பதிவிட்டுள்ளார். எமது ஆஸ்பத்திரியை நோக்கி இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் அச்சத்தோடு ஓடி வந்தனர். பாதுகாப்பற்ற தங்களையும் தமது குடும்பத்தவர்களையும் இஸ்ரேலியர்கள் தாறுமாறாகக் கொன்று கொண்டிருப்பதாக அவர்கள் தெரிவித்தனர். அவர்கள் அவர்களது உயிருக்காக அஞ்சினர். அவர்களுக்கு தங்களைக் காப்பாற்றிக் கொள்ள முடியவில்லை. அவர்களைக் காப்பாற்றவும் எவரும் அங்கு இருக்கவில்லை.

இரவு நேரம் ஆன போது ஷப்ரா மற்றும் ஷடில்லா முகாம்களில் இஸ்ரேலிய இராணுவத்தினர்களால் பற்ற வைக்கப்பட்ட இராணுவ ஒளி எழுந்தது. இரவு முழுவதும் இயந்திரத் துப்பாக்கிகளின் ஓசைகளும் வெடிப்புக்களும் கேட்ட வண்ணம் இருந்தன. ஆஸ்பத்திரியை நோக்கி காயமடைந்தவர்கள் தொடர்ந்து கொண்டு வரப்பட்ட வண்ணம் இருந்தனர். அவர்களில் ஒரு சிறுவன் இருந்தான் அவனது குடும்பத்தில் இருந்த 27 பேர் சுடப்பட்டிருந்தனர். அவன் மோசமாகக் காயம் அடைந்திருந்தான். அவனுக்கு சிகிச்சை அளிக்கும் போது எமக்கு ஏற்பட்ட வலியை வார்த்தைகளில் எழுத முடியாது என்று டொக்டர் சுவீ சாங் ஆங் தனது அனுபவத்தை எழுதி உள்ளார்.

நாங்கள் சப்ராவுக்குள் அணிவகுத்துச் சென்ற போது வயதானவர்களும் சிறுவர்களும் பெண்களும் ஆயுதம் தரித்தவர்களால் சூழப்பட்டிருந்ததை நாம் கண்டோம். அச்சத்துடன் காணப்பட்ட விரக்தியடைந்திருந்த ஒரு தாய் தனது குழந்தையை எங்களிடம் தர முயன்றார். ஆனால் அதற்கு அவருக்கு அனுமதி கிடைக்கவில்லை. அந்தக் குழந்தையை காப்பாற்றுமாறு அவர் கெஞ்சினார். ஆனால் பரிதாபம் அந்தத் தாய் மற்றும் பிள்ளை உற்பட அங்கிருந்த அனைவருமே பின்னர் கொல்லப்பட்டனர்.

அங்கு இடம்பெற்ற கோரங்களும் அவற்றின் நடுவே அந்த மக்கள் காட்டிய துணிச்சல்களும் இன்னும் எம் மனதை விட்டு நீங்கவில்லை. 1982ல் அந்த பலஸ்தீன மக்கள் மீது இழைக்கப்பட்ட அகோரமான படுகொலைகளின் நினைவுதான் இன்று அனுஷ்டிக்கப்படுகின்றது. இது 1948 முதல் பலஸ்தீன மக்கள் மீது தொடர்ச்சியாக இழைக்கப்பட்டு வரும் அநீதியாகும் என்று கூறும் டொக்டர் சுவீ சாங் ஆங் தொடர்ந்து குறிப்பிடுகையில்

உங்களுடைய கஷ்டமான பயணத்தில் உங்களோடு இணைந்து அன்பு, அதரவு, நம்பிக்கை என்பனவற்றுடன் கைகோர்த்து நிற்க நாம் உறுதி பூண்டுள்ளோம். பலஸ்தீன மக்களிடம் இருந்து திருடப்பட்ட சுதந்திரமும் சமாதானமும் அவர்களின் தொடர்ச்சியான போராட்டத்தின் மூலம் என்றாவது ஒருநாள் அவர்களுக்கு கிடைத்தே தீரும் என்ற உறுதியான நம்பிக்கை எமக்கு உள்ளது. அந்த நம்பிக்கையோடு கண்ணீருடன் இந்த நிகழ்வை நினைவு கூறுகின்றோம். இந்தப் போராட்டத்துக்கு நாம உறுதியான அர்ப்பணத்துடன் கூடிய ஆதரவை வழங்குகின்றோம். நாம் எதிர்ப்பார்க்கும் அந்த வெகுமதிக்குரிய தினம், பலஸ்தீன குழந்தைகளின் முகத்தில் மீண்டும் புன்னகை மலரும் தினம் வருடக்கணக்காக அவர்கள் டொடர்ந்து நடத்தி வரும் போராட்டத்துக்கான வெகுமதியாக நிச்சயம் கிடைத்தே தீரும் என்று குறிப்பிட்டுள்ளார்.

லெபனானில் உள்ள பலஸ்தீனர்கள் தொடர்ந்தும் நிர்க்கதி நிலையில் உள்ளனர். அவர்கள் தமது வீடுகளை இழந்துள்ளனர் பசியில் வாடுகின்றனர். அவர்களுக்கான நீதி இன்னமும் மறுக்கப்பட்ட நீதியாகவே உள்ளது. அவர்களின் துன்பங்களும் துயரங்களும் அவர்களை விரக்தியின் விளிம்புக்கு கொண்டு வந்துள்ளது. பிள்ளைகள் அங்கு பிறக்கின்றார்கள், அவர்கள் எப்படியோ வளருகின்றார்கள். அவர்கள் மீது நடத்தப்பட்ட படுகொலைகளின் இருள் இன்னமும் அவர்களை விட்டு நீங்கவில்லை. தமது தாயகத்தக்கு திரும்பிச் செல்லலாம் என்ற நம்பிக்கையையும் அவர்கள் தற்போது இழக்கத் தொடங்கி உள்ளனர். அவர்களது வாழ்க்கையில் யாருக்காவது கொஞ்சமாவது ஆறுதலை அளிக்க முடியுமா?


1 கருத்துரைகள்:

Post a Comment