Header Ads



இன்றுமுதல் 3 மணி நேரத்தில் PCR சோதனை முடிவுகள் - முழு தடுப்பூசி செலுத்தியிருந்தால் நாட்டிற்குள் பயணிக்க அனுமதி


வெளிநாடுகளிலிருந்து இலங்கை வருவோருக்கு 3 மணித்தியாலங்களில் பிசிஆர் பரிசோதனை இன்று -25- முதல் கட்டுநாயக்க விமான நிலையத்தில் நடைமுறைக்கு வருகிறது.

முதல் கட்டமாக, வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்காக இந்த ஆய்வகத்தில் பிசிஆர் சோதனைகள் முன்னெடுக்கப்படவுள்ளன.

இதற்காக 40 அமெரிக்க டொலர் அறவிடப்படுகிறது. குறித்த ஆய்வகத்தில் ஒரு மணி நேரத்துக்கு 500 பி.சி.ஆர் பரிசோதனைகள் என்ற அடிப்படையில் நாள் ஒன்றுக்கு 7000 பி.சி.ஆர் பரிசோதனைகளை மேற்கொள்ளத் தீர்மானித்துள்ளனர்.

குறித்த பி.சி.ஆர் பரிசோதனை அறிக்கையை 3 மணித்தியாலங்களில் பெற்றுக்கொள்ளக் கூடிய வசதிகள் செய்யப்பட்டுள்ளன.

வெளிநாடுகளிலிருந்து இலங்கை வருவோர் குறித்த அறிக்கையின்படி,  கொரோனா தொற்று இல்லை என்பது உறுதி செய்யப்பட்டால், முழுமையாகத் தடுப்பூசி செலுத்தியிருப்பது உறுதி செய்யப்பட்டால் மட்டுமே சுற்றுலாப் பயணிகள் தனிமைப்படுத்தலின்றி நாட்டிற்குள் பயணிக்க அனுமதிக்கப்படுவார்கள்.

இலங்கை குடிவரவு, குடியகல்வுத் திணைக்களத்தால் குறித்த திட்டம் முன்னெடுக்கப்படுகின்றது.

1 comment:

  1. ஒரு நாளைக்கு 280,000 டொலர், ஒரு மாதத்துக்கு 8,400,000 டொலர்களை சம்பாதித்தால் PCR மூலம் உல்லாசப்பிரயாணத்துறை இல்லாவிட்டாலும் உல்லாச பிரயாண வருமானத்தை இலகுவில் அடைந்துவிடலாம்.

    ReplyDelete

Powered by Blogger.