Header Ads



குற்றப்பத்திரத்தை வழங்குவதற்காக நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு மௌலவிகள் உட்பட 25 பேருக்கு அழைப்பாணை


கத்தோலிக்க தேவாலயங்கள் மற்றும் ஐந்து நட்சத்திர ஹோட்டல்களை இலக்கு வைத்து நடத்தப்பட்ட தொடர் குண்டுவெடிப்பில் 300 பேரை கொன்ற மற்றும் 300 க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்த சம்பவம் தொடர்பில்  குற்றஞ்சாட்டப்பட்டுள்ள, மௌலவிகள் உட்பட பிரதிவாதிகள் 25 பேரை ஒக்டோபர் 4ஆம் திகதி நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு மூன்று நீதிபதிகள் அடங்கிய மேல் நீதிமன்ற தீர்ப்பாயம் இன்று (13) அழைப்பாணை பிறப்பித்தது.

சட்டமா அதிபர் தாக்கல் செய்த வழக்கை விசாரித்த மேல் நீதிமன்றத்தின் மூன்று நீதிபதிகள் அடங்கிய குழாம், குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு எதிரான குற்றப்பத்திரத்தை வழங்குவதற்காக நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு அழைப்பாணை பிறப்பித்தது.  

இந்த வழக்கை விசாரிப்பதற்காக பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரியவால் நியமிக்கப்பட்ட நீதிபதிகளான தமித் கொட்டவத்த (தலைவர்) அமல் ரணராஜா மற்றும் நவரட்ன மாரசிங்க அடங்கிய குழாம் இந்த அழைப்பாணையை பிறப்பித்தது.

இந்த வழக்குத் தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட 23,270 குற்றச்சாட்டுகளை விசாரிக்க மேல் நீதிமன்றத்தின் மூன்று நீதிபதிகள் கொண்ட தீர்ப்பாயத்தை அமைக்குமாறு சட்டமா அதிபர் சஞ்சய ராஜரத்தினம் விடுத்த கோரிக்கையை அமையவே தீர்ப்பாயம் நியமிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.


No comments

Powered by Blogger.