Header Ads



சீனாவிடமிருந்து இதுவரை 22 மில்லியன் Sinopharm தடுப்பூசி டோஸ்கள் இலங்கைக்கு கிடைத்துள்ளன


சீனா ஒரு மில்லியன் டோஸ் Sinovac கொவிட்-19 தடுப்பூசி டோஸ்களை இலங்கைக்கு வழங்க முடிவு செய்துள்ளது.

இலங்கையின் தடுப்பூசி திட்டத்தை மேலும் விரிவுபடுத்தும் நோக்கில் சீன அரசாங்கத்தின் அன்பளிப்பாக இதனை வழங்கவுள்ளதாக, ட்விற்றர் பதிவொன்றை இட்டுள்ள இலங்கையிலுள்ள சீனத் தூதரகம் இதனை அறிவித்துள்ளது.

Sinovac (சினோவக்) தடுப்பூசியானது உலகில் அதிகம் பயன்படுத்தப்படும் தடுப்பூசி எனவும், கடந்த ஓகஸ்ட் மாத இறுதி வரை அதன் 1.8 பில்லியன் டோஸ்கள் விநியோகிக்கப்பட்டுள்ளதாக சீனத் தூதரகம் குறிப்பிட்டுள்ளது.

அத்துடன், உலகிலுள்ள 50 நாடுகளில் உள்ள 1.4 பில்லியன் பேருக்கு அத்தடுப்பூசி வழங்கப்பட்டுள்ளதாகவும் சீனத் தூதரகம் சுட்டிக்காட்டியுள்ளது.

சீனாவிடமிருந்து இறுதியாக கடந்த செப்டெம்பர் 05ஆம் திகதி கிடைக்கப்பெற்ற 4 மில்லியன் Sinopharm தடுப்பூசி டேஸ்களுடன், இதுவரை இலவசமாக 3 மில்லியன் Sinopharm தடுப்பூசிகள் உள்ளிட்ட 22 மில்லியன் Sinopharm தடுப்பூசி டோஸ்கள் கிடைக்கப்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments

Powered by Blogger.