Header Ads



இலங்கையில் உற்பத்தியாகும் 150 உணவுப்பொருட்களை, சவூதியிலுள்ள லூலூ சூப்பர் மார்க்கட்களில் விளம்பரப்படுத்தும் திட்டம்


- ஏ.பி.எம்.அஸ்ஹர் -

இலங்கையில் உற்பத்தி செய்யப்படும் சுமார் 150 கும் மேற்பட்ட உணவுப்பொருட்களை சவூதி அரேபியாவிலுள்ள  லூலூ சூப்பர் மார்க்கட்களில் விளம்பரப்படுத்தும் செயற்திட்டமொன்று.ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.

இலங்கையின் உணவு உற்பத்திப் பொருட்களை

சவூதி அரேபியாவில் விளம்பரப்படுத்தும் நோக்கில் இலங்கையிலிருந்து சவூதிஅரேபியாவுக்கு இறக்குமதி செய்யப்பட்ட 150 க்கும் மேற்பட்ட உணவுப் பொருட்களை விளம்பரப்படுத்தும் செயற்திட்டம் ஒன்று சவுதியில் உள்ள மிகப் பெரும் சூப்பர் மார்க்கட்களில் ஒன்றான லூலூவில் இன்று ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.

இந் நிகழ்வில் சவூதி அரேபியாவிலுள்ள இலங்கைத் துாதரக உயர் அதிகாரிகள், லூலூ குழுமத்தின் உயர் அதிகாரிகள் உட்பட பல முக்கியஸ்தர்களும் கலந்து கொண்டனர்.

No comments

Powered by Blogger.