Header Ads



ஐ போன் 13 அறிமுகம்

ஆப்பிள் நிறுவனம் தனது ஐபோனின் அடுத்த பதிப்பான ஐபோன் 13 உள்பட பல்வேறு புதிய சாதனங்களை அறிமுகப்படுத்தியுள்ளது.

புதிய ஐபோனில் பல்வேறு வசதிகளை அறிமுகப்படுத்தியிருப்பதுடன், பழைய வசதிகளையும் ஆப்பிள்


நிறுவனம் மேம்படுத்தியிருக்கிறது. பிரகாசமான ஸ்கிரீன், அதிக திறன் கொண்ட பேட்டரி, வேகமான சிப் என ஐபோன் 13 கூடுதல் திறன் கொண்டதாக இருக்கும்.

நினைவு திறனைப் பொறுத்தவரை 128 ஜிபி முதல் அதிகபட்சமாக 500 ஜிபி வரை இருக்கும். 64 ஜிபி வகை நிறுத்தப்படுகிறது.

ஐபோன் தவிர ஆப்பிள் வாட்ச், ஐபேட் ஆகியவற்றின் அடுத்த பதிப்புகளையும் ஆப்பிள் நிறுவனம் வெளியிட்டுள்ளது.

இந்தியாவில் ஐபோன் 13-இன் தொடக்க விலை ரூ.79,000 என நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது. ஐபோன் மினியின் விலை ரூ.69,900.

கடந்த ஆண்டில் 64 ஜிபி நினைவகம் கொண்ட ஃபோன்கள் கிடைத்த அதே விலையில் இப்போது 128 ஜிபி நினைவகம் கொண்ட போன்கள் கிடைக்கும் என்பது ஐபோன் ரசிகர்களைக் கவரக்கூடிய அம்சமாகும்.

உயர்திறன் கொண்ட ஐபோன் 13ப்ரோ மாடலின் தொடக்கவிலை ரூ.1,19,900. இதிலும் மேம்பட்ட ஐபோன் ப்ரோ மேக்ஸ் 1,29,000 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படும்.

No comments

Powered by Blogger.