Header Ads



பாராளுமன்றத்திற்கு வரவுள்ள கொரோனா சட்டம் - விவாதங்களோ வாக்கெடுப்போ இன்றி பங்களிக்கிறது SJB


எழுந்துள்ள சூழ்நிலையைக் கருத்திற்கொண்டு மருத்துவ மற்றும் விஷேட நிபுணர்களின் ஆலோசனையின் அடிப்படையில் உடனடியாக நாட்டை முடக்குமாறு ஐக்கிய மக்கள் சக்தி கோரியுள்ளது.

கட்சியின் பொதுச்செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார இந்தக் கோரிக்கையை விடுத்துள்ளார்.

நாடு ஏற்கனவே ஒரு பயங்கரமான தொற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளது. நாளுக்கு நாள் பதிவாகும் கோவிட் தொற்று மற்றும் இறப்புகளின் எண்ணிக்கை கவலைக்கிடமான அளவில் உயர்ந்து வருகிறது.

அரசாங்கத்தால் வெளியிடப்பட்ட புள்ளிவிவரங்களில் உள்ள முரண்பாடுகள் அந்த கொடூரத்தை மேலும் அதிகரிக்கிறது .

அரசாங்கம், இந்த விடயத்தில், புத்திசாலித்தனமாக செயல்படவில்லை என்பதுடன் தன்னிச்சையான கொள்கைகளின்படி உயிர்களுடன் விளையாடிக்கொண்டிருக்கிறது.

அனைத்து சுகாதார வல்லுநர்களும் இந்த தீவிர நிலைமை குறித்து தீர்க்கமான எச்சரிக்கைகளை தொடர்ந்து வழங்கி வருகின்றனர்.

இந்த நிலையில், அனைவரும் நாட்டை உடனடியாக மூட வேண்டும் என்றே கூறுகின்றனர்.அதைத் தாண்டி இந்தப் பேரழிவிலிருந்து தப்பிக்க முடியாது என்பது அனைத்து நிபுணர்களின் கருத்தாகவுள்ளது.

அடுத்த வாரம் நாடாளுமன்றத்தில் விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ள கோவிட் சட்டமூலத்தை நிறைவேற்றுவதற்கு விவாதங்களோ வாக்கெடுப்போ இன்றி பங்களிக்க ஐக்கிய மக்கள் சக்தி, தயாராக இருக்கிறது.

எனவே, அரசாங்கம், தன்னிச்சையான மற்றும் ஒருதலைபட்சமான நடவடிக்கைகளை கைவிட்டு விட்டு, இந்த முக்கியமான தருணத்தில் நாட்டை முடக்கி, மக்களின் உயிர்களைப் பாதுகாக்க நிபுணர்களின் ஆலோசனையின் பேரில் முடிவுகளை எடுக்குமாறு ரஞ்சித் மதும பண்டார கேட்டுள்ளார்.

No comments

Powered by Blogger.