Header Ads



PCR பரிசோதனைக்காக 6,500 ரூபா, அன்டிஜன் பரிசோதனைக்காக 2,000 ரூபாவும் நிர்ணயம்


PCR மற்றும் அன்டிஜன் (Antigen) பரிசோதனைகளுக்கான கட்டணங்களை அறிவிக்கும் வர்த்தமானி அறிவித்தலை நாளை (12) வௌியிடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படுவதாக சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாரச்சி தெரிவித்துள்ளார்.

சுகாதார அமைச்சில் இன்று (11) நடைபெற்ற கலந்துரையாடலை அடுத்து அமைச்சர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

அதனடிப்படையில், PCR பரிசோதனைக்காக 6,500 ரூபா மற்றும் அன்டிஜன் (Antigen) பரிசோதனைக்காக 2,000 ரூபாவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களை அடையாளம் காண்பதற்காக தனியார் வைத்தியசாலைகளில் இடம்பெறும் PCR மற்றும் Antigen பரிசோதனைகளுக்காக அறவிடப்படும் கட்டணங்களை கட்டுப்படுத்த சுகாதார அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது.

No comments

Powered by Blogger.