Header Ads



மு. கா. Mp க்கள் மன்னிப்பு கோரியுள்ளமையால், அவர்களை மன்னிக்க தீர்மானித்துள்ளளோம் - ஹக்கீம்


அரசியலமைப்பின் 20வது திருத்தத்துக்கு ஆதரவாக வாக்களித்த ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸை சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர்கள் மன்னிப்பு கோரியுள்ளமையால் , அவர்களை மன்னிக்க தீர்மானித்துள்ளளோம் என கட்சியின் தலைவர் ரவூப் ஹக்கீம் எம்.பி தெரிவித்தார்.

அரசியல் உச்ச பீடம் ஏற்கெனவே தீர்மானித்து விட்டது. அவர்கள் மன்னிப்பு கோரியுள்ளதால் மன்னிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. எனவே, அந்த விவகாரம் நிறைவடைந்துவிட்டது என்று தெரிவித்த ஹக்கீம், அவர்களிமிருக்கும் வேறு திறமைகளைக் கருத்திற் கொண்டு

கட்சியை முன்னோக்கிக் கொண்டு செல்ல வேண்டிய தேவை எமக்கிருக்கிறது என்றார்.

கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போது அவர் இதனைத் தெரிவித்தார்.  “கட்சியை முன்னோக்கிக் கொண்டு செல்வதற்கான, பொறுப்புக்கள் அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.

அதனை அவர்கள் சிறப்பாக செய்வார்கள் என்று எதிர்பார்க்கிறோம். 20ஆவது திருத்தத்துக்கு ஆதரவளிக்க வேண்டும் என்ற முடிவு கட்சியினுடையதல்ல. கட்சி என்றாலும் சில விவகாரங்களில் சில தடுமாற்றங்கள் ஏற்படுகின்றன” என்றார்.

கட்சியின் தீர்மானத்துக்கு அப்பாற்சென்று யாராவது செயற்படுவார்களாயின், கட்சி யாப்புக்கமைய என்ன செய்யவேண்டுமோ அதனை செய்திருக்கிறோம் எனத் தெரிவித்த அவர், அந்த அடிப்படையிலேயே இந்த முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன என்றார்.

8 comments:

  1. ஏன்யா மூஸ்லீம் சமூகம் என்ன மடையர் சமூகம் என்றா நினைத்துக்கொண்டிருக்கிறீர்கள். அடுத்ததேர்தல் வாக்களிப்பின்போது நீங்கள் புரிந்துகொள்வீர்கள்.

    ReplyDelete
  2. இது 2 முஸ்லிம் கட்சிகளினதும் நாடகம். தலைவர்கள் ஒரு பக்கம் இருந்துகொண்டு, பசிலிடம் பணம் வாங்கிக்கொண்டு மற்றவர்கள் அந்தபக்கமும் வாக்களித்துவிட்டு பணத்தை பங்குபோட்டுவிட்டாரகள், இது தான் அரசியல்வியாபாரம்.

    ReplyDelete
  3. இவருடைய கட்சி ஆட்கள் தவிர இந்த நாட்டு முஸ்லிம்களில் யாராலும் ஒருவருக்காவது எந்த விதமான உதவியும் செய்யாத ஒரே கட்சித் தலைவர் இவர்தான்.

    ReplyDelete
  4. The cause of disaster for the Islamic nation in Sri Lanka since 1988

    ReplyDelete
  5. Those MPs who defied you and voted for 20A, will do that again when the opportunity arises. You want to keep them because you have NO Popular Base country-wise and you need them to continue to be the leader of the Party.

    In other words, you and your MPs are fooling the people. How long do you think you can go on like this?

    You can forgive MPs on some silly excuse but the People will NEVER Forgive you and the MPs who have been forgiven by you

    The SLMC has reached its rock bottom. This is Most Certainly the last Term for you and the Jokers who voted for 20A.

    ReplyDelete
  6. இன்னொரு தவறு செய்ய மு.கா. எம்பிக்களுக்கு பச்சைக்கொடி காட்டி விட்டார் தலைவர்.

    ReplyDelete

Powered by Blogger.