Header Ads



இராணுவத் தளபதியின் வீட்டை வீடியோ எடுத்ததாக, ஐக்கிய மக்கள் சக்தி Mp க்கள் மீது குற்றச்சாட்டு


இராணுவத் தளபதி ஷவேந்திர சில்வாவின் வீட்டை வீடியோ செய்ய லேன்ட் கிரஷர் வாகனத்தில் வந்த நபர்கள் தொடர்பில் வெலிக்கடைப் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர்களே இராணுவத் தளபதியின் வீட்டை வீடியோ செய்ததாகத் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இராணுவத் தளபதியின் வெலிக்கடை வீட்டுக்கு அருகில் கடந்த 14ஆம் திகதி வந்தவர்களே, இராணுவத் தளபதியின் வீட்டையும் வீட்டைச் சுற்றிய பகுதிகளை வீடியோ செய்ததாக அப்பிரதேசத்தில் உள்ள சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை, வந்தவர்களில் இருவர் ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் என பாதுகாப்புக் கடமையில் இருந்த இராணுவத்தினர் அடையாளங் கண்டிருந்ததாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

குறித்த பாராளுமன்ற உறுப்பினர்கள் தொடர்பிலும், அவர்கள் வந்திருந்த வாகன இலக்கம் தொடர்பான தகவல்களைக் கொண்டு வெலிகடை பொலிஸ் நிலையத்தில் இராணுவத்தினர் முறைப்பாடு செய்துள்ளனர்.

No comments

Powered by Blogger.