Header Ads



ஜனாதிபதி, பிரதமரிடம் நேரில் முறையிட்ட றிசாத்திற்கு நீதி கிடைக்குமா..?


24 மணிநேரமும் மூடிய அறைக்குள் வைத்துக்கொண்டு, தன்னை மலசலகூடத்துக்கு மட்டும் வெளியில் செல்ல அனுமதிப்பதாக, சி.ஐ.டி யில் 102 நாட்கள் தடுத்துவைக்கப்பட்டுள்ள பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார்.

இன்று (04) அவர் பாராளுமன்றத்தில் ஜனாதிபதியின் கவனத்துக்கு இந்த விடயத்தைக் கொண்டுவந்த போதே இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் கூறியதாவது,

சபாநாயகர் அவர்களே,

ஜனாதிபதியும், பிரதமரும் இந்தச் சபையில் இருக்கின்றார்கள். என்னை கடந்த ஏப்ரல் 24ஆம் திகதி கைது செய்தார்கள். வெறும் 5 நாட்கள் மாத்திரமே என்னை விசாரணை செய்தார்கள். 102 நாட்கள் என்னை தடுத்துவைத்துள்ளார்கள். 97 நாட்கள் வரையில் அறையில் அடைத்து வைத்துள்ளார்கள். 24 மணி நேரமும் அந்த அறை மூடப்பட்டு, மலசலகூடத்துக்கு மட்டும் என்னை வெளியில் செல்ல அனுமதிக்கிறார்கள். இன்றுவரை, எந்தவிதமான விசாரணைகளும் இடம்பெறவில்லை. நான் பொய் கூறவில்லை. வேண்டுமென்றால் வந்து பார்க்க முடியும்.

ஜனாதிபதி அவர்களே, இன்னுமொரு விடயம். என்னைக் கைது செய்த போது, பொலிஸ் பொறுப்பதிகாரியிடம் “என்னை ஏன் கைது செய்கிறீர்கள்?” என்று நான் கேட்டபோது, எனது அமைச்சில் பணிபுரிந்த மேலதிக செயலாளர் பாலசுப்பிரமணியத்துடன், ஒன்றரை நிமிடம் தொலைபேசியில் உரையாடியதாக கூறினார்கள். இதனால்தான் என்னை கைது செய்துள்ளதாக கூறினார்கள். வேறு எந்தக் காரணமும் இல்லை ஜனாதிபதி அவர்களே. வேறு எந்தக் காரணமும் இல்லை.

1 comment:

  1. கேட்பதற்கும் கொடுப்பதற்கும். உங்களுக்கு இறைவன் இருக்கிறான். இன்னமாஅஷ்ஸாபிரீன்.

    ReplyDelete

Powered by Blogger.