Header Ads



கொழும்பு வைத்தியசாலையில் அபூர்வ சத்திரசிகிச்சை - எங்கள் உயிரை பணயம் வைத்து சிகிச்சையை தீர்மானித்தோம் என்கிறர்கள் வைத்தியர்கள்


கொழும்பு தேசிய வைத்தியசாலை மாரடைப்பால் ஆபத்தான நிலைமைக்கு சென்ற நோயாளி ஒருவர் வைத்தியர்களால் காப்பாற்றப்பட்டுள்ளார்.

இரண்டு மணித்தியாலங்கள் மேற்கொள்ளப்பட்ட ஸ்டென்ட் பொருத்தும் சத்திரசிகிச்சை ஊடாக குறித்த நபர் காப்பாற்றப்பட்டுள்ளார்.

இதயம் தொடர்பான விசேட நிபுணர் கோத்தாபய ரணசிங்க உட்பட குழுவினரால் இந்த சத்திரசிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளார்.

சத்திர சிகிச்சைக்குட்படுத்தப்பட்ட குறித்த நபருக்கு கொவிட் தொற்று காரணமாகவே மாரடைப்பு ஏற்பட்டுள்ளதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர். 41 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தந்தை ஒருவரே இவ்வாறு காப்பாற்றப்பட்டுள்ளார்.

“மாரடைப்பு ஏற்பட்ட நோயாளி ஆபத்தான நிலைமையிலேயே வைத்தியசாலையில் அனுமடதிக்கப்பட்டார். உடனடியாக மேற்கொள்ளப்பட்ட ரெபிட் என்டிஜன் பரிசோதனையில் கொவிட் தொற்று உறுதியானது.

முதன்மை பரிசோதனையில் அவரது இதயத்தின் மூன்று முக்கிய குழாய்களில் இடது செல்களுக்கு இரத்தத்தை வழங்கும் முக்கிய குழாயின் தொடக்கப் புள்ளியில் பெரிய இரத்த உறைவால் அடைப்பு ஏற்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

அந்த சந்தர்ப்பத்தில் அவசர சத்திரசிகிச்சை செய்ய வேண்டிய நிலைமையிலேயே நோயாளி காணப்பட்டுள்ளார். அவருக்கு ஏற்பட்ட இரத்த அடைப்பை உடனடியாக சீர் செய்யவில்லை என்றால் அவர் உயிரிழக்கும் நிலைமை காணப்பட்டது.

அவர் கொவிட் தொற்றாளர் என்பதனால் அவருக்கு சத்திரசிச்சை மேற்கொள்வதன் மிகப்பெரிய ஆபத்து எங்களுக்கும் உள்ளது. எனினும் வைத்தியர்கள் என்ற ரீதியில் நோயாளியின் உயிரை காப்பாற்றும் பொறுப்பு எங்களுக்கு உள்ளது. எங்கள் உயிரை பணயம் வைத்து இந்த சத்திர சிகிச்சையை மேற்கொள்ள நாங்கள் தீர்மானித்தோம்.

எனது குழுவினரின் உதவியுடன் இதனை வெற்றிகரமாக செய்ய முடிந்தது. தற்போது அந்த நபர் ஆரோக்கியமான நிலைமையில் சிகிச்சை பெற்று வருகின்றார்” என இதயம் தொடர்பான விசேட நிபுணர் கோத்தாபய ரணசிங்க தெரிவித்துள்ளார்.

1 comment:

  1. மிகவும் ஆபத்தான நிலைமையில் நோயாளியின் உயிரைக்காப்பாற்றிய இந்த டாக்டர்கள் குழுவுக்கு எமது பணிவான நன்றிகளும் பிரார்த்தனைகளும்

    ReplyDelete

Powered by Blogger.