August 24, 2021

மங்கள சொன்ன கடைசி வார்த்தைகள்...!


"விரைவில் லண்டனுக்கு வருவேன்.அப்போது வந்து சந்திக்கின்றேன் சரோஜ்."

இது மங்கள நோய்வாய்ப்படுவதற்கு முன்பு என்னிடம் சொன்ன கடைசி வார்த்தைகள்.

ஆனால் அந்த பயணத்திற்கு முன்னரே, மங்கள புறப்பட்டுவிட்டார்........

சிறியவர்,இளைஞன்,பெரியவர் என்ற பாகுபாடு இல்லாமல் எல்லோரிடமிருந்தும் வேதனை  பிரவகித்துத்  கொண்டிருக்கின்றது.....

மங்கள ஒருபோதும் 'சேர்' ஆகவோ ‘மஹத்தயா’ ஆகவோ ஆனதில்லை,எல்லோரும் மங்கள என்றே பேசிக்கொண்டார்கள். 

என்னோடு கதைத்த எல்லோருக்கும் என்னிடம் சொல்வதற்கு செய்தியொன்று இருந்தது. அதுதான் அவர்கள், ‘மங்கள’,எல்லோருக்கும் வார்த்தையொன்றிலாவது செய்த உதவி ஒத்தாசைகள் போன்றே ஏதோ ஒரு வகையில் எல்லோருக்கும் பலமாக இருந்ததுபற்றி கூறுவதாகும். அல்லது நாட்டின் எதிர்கால சந்ததி பற்றி மங்கள விற்கு இருந்த எதிர்பார்ப்பைபற்றி கூறுகின்றனர்.

‘அவை எதனையும் ‘மங்கள’ பொய்யாக செய்யவில்லை சரோஜ்’ என கண்ணீருடன் கதைத்த நண்பர் ஒருவர் கூறினார்.

‘மங்கள’ என்பவர் எமது காலத்தில் தாராளவாத அரசியலின் சின்னம்,இரு முறை சொல்லாமல் சொல்லவேண்டியதை நேராக பேசும் நேர்மையான அரசியல் வாதிக்கு அடையாளம்.

இவை அனைத்தையும் விட ‘மங்கள’ வரலாற்றில் இடம்பெருவது இனவாதம் என்ற புற்றுநோயிற்கு எதிராக அவர் செய்த சமரினாலாகும். அந்த போராட்டத்திற்கு அவர் கொடுத்த தலைமைத்துவத்தினால் ஆகும்.

2002 இல் ரணிலின் ஆட்சி வந்தபோது ‘மங்கள’வின் அமைச்சரவை பறிக்கப்பட்டது. அப்போது நான் ‘சந்தேக்ஷ’வில் ஒரு நிகழ்ச்சிக்காக அவருடன் தொடர்பு கொண்டு ‘அமதிதுமா’ என்று கதைக்க ஆரம்பித்தேன், இல்லை ‘ மந்திரிதுமா,மந்திரிதுமா’ என்று நிணைவு படுத்தினார்,மனதிற்கு வேதனையாக இருந்திருக்கும் இருந்தாலும் அதுதான் ‘மங்கள’.

அதற்கு நீண்ட நாளைக்கு பிறகு லண்டனில் உள்ள ‘பப்’ ஒன்றில் அவரை சந்த்திதேன்.

‘மங்கள வந்திருக்கிறார்,வா,சந்திக்கப்போவோம்’ என ‘லங்கா நியுஸ் வெப்’பின் ஆசிரியரும் நண்பருமான சந்திம விதாரனாரச்சி அழைத்தார்.அலன் கீனத்,அபென்ஸ் சமுகந்ர பிரசன்ன ரத்னாயக ஆகியோரும் அப்போது ‘பப்’ ல் இருந்தார்கள். மங்கள அன்று சந்திம ‘ ஆபத்தானவர்’ என்றார்.

கோவிட் பரவலுக்கு சற்று முன்னர் ம்’மங்கள’ கடைசியாக லண்டன் வந்திருந்தபோது ‘யஹபாலனய’ ஆட்சியின் ஆரம்பநாட்கள் பற்றியும் அவ்வாட்சி கவிழ்வதுக்குமான காரணங்கள் பற்றியும் நீண்ட நேரம் கதைத்தோம். மங்கள அன்று சொன்னவைகள் வரலாற்றுப்பாடம் போன்றிருந்தது. அது தனிப்பட்ட கதையாடல். ஆனால் அதற்கு சிறிது காலத்திற்குப்பின் அவை அனைத்தையும் தொலைக்காட்சியொன்றிற்கு கூறியிருந்தார்.

மைத்திரிபால சிரிசேன ஜனாதிபதியாகி சிலநாட்களில் அமெரிக்க ராஜாங்கச்செயலாளர் ‘ஜோன் கெரி’ அவர்கள் இலங்கைக்கு வந்தார்கள். மங்கள சொன்னதன்படி,ஜோன் கெரி அமெரிக்காவிலிருந்தே நல்லதொரு சிங்கள மொழி பெயர்ப்பாளரை அழைத்து வந்திருந்தாராம்.வெளிநாட்டமைச்சர் என்ற வகையில் கெரி உடன் மங்களவும், சிறிசேன ஆகியோரும் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர். அன்று ஜோன் கெரி,சிரிசேன ஜனாதிபதியினால் எவ்வளவு ஈர்க்கப்பட்டார் என்றால் பேச்சுவார்த்தையின்முடிவில் ‘உங்களுக்கு மண்டேலா ஒருவர் கிடைத்திருக்கிறார்’ என ‘மங்கள’ விடம் கூறியிருக்கின்றார்.அது எந்தளவு தூரத்திற்கு சென்றது என்றால் சிறிசேன ஜனாதிபதியை நோபல் பரிசுக்காக சிபாரிசு செய்வதற்கும் அமெரிக்காவிற்கு யோசனை இருந்தது.

நாட்டிற்கும் உலகிற்கும் இவ்வாறு பாரிய எதிர்ப்பார்ப்பை தோற்றுவித்து உருவான ‘யகபாலனய’ ஆட்சி சுக்கு நூறாகியது பற்றி ‘மங்கள’ பெரிதும் வருத்தப்பட்டார்.

‘மங்கள’ வின் கருத்துப்படி அதற்கான மூல காரணம் கட்சி சார்பற்ற மைத்திரி சிறிலங்கா சுதந்திரக்கட்சியை பாரமெடுத்ததாகும். அவ்வாறு பொறுப்பேற்றதும் ஐக்கிய தேசிய கட்சியை ஓரம் கட்டியதாகும். ஆனால் ரணில் அப்பாவி என்று நான் கருதமாட்டேன்.

அன்று இன்னும் நிறை விடயங்களை கதைத்தோம்.

‘மங்களவின்’ அரசியலில் தவறுகள் இருந்தன.அதில் பிரதானமானது சந்திரிக்காவின் நிர்வாகத்தில் சந்திரிக்காவின் உதவியாளராக ‘மங்கள’வின் பங்கு. அத்தோடு ‘மங்கள’ என்பவர் தந்திரமான பிரச்சாரகர். ரணிலின் அரசியல்குறித்து எனக்கு எவ்வளவு விமர்சனம் இருந்தாலும் ரணிலை ‘புலி’ ஆக்கியது ‘மங்கள’தான்.

‘மங்கள’ குணமடைந்து மீண்டும் லண்டன் வந்தவுடன் இவை அனைத்தையும் மீண்டும் கதைக்கவேண்டும் என எண்ணியிருந்தேன்...............

ஆனால் இதுபோன்ற விமர்சனங்களுக்கு மத்தியிலும், இனவாதத்திற்கு எதிராக, பெரும்பான்மையினரின் சிறுபான்மையினரின்மீதான அடக்குமுறைக்கு எதிராக, புத்தரின் பெயரை விற்கும் மோசடிகளுக்கு எதிராக, அறியாமை மற்றும் மாயைக்கு எதிராக  குரல்கொடுக்கும் ‘மங்கள’ வின் பங்களிப்பு எல்லா தவறுகளை விடவும் உயர்ந்திருக்கின்றது.

 “ஐயோ, இலங்கைக்கு கொஞ்சம் என்றாலும் வேலை செய்வதற்கு தலைவர் என்ற வகையில் ‘மங்கள’ மட்டுமே இருந்தார்” என கட்டுரையை எழுதும்ப்போதும் ஒருவர் தொலைபேசியில் என்னிடம் கூறினார்.

‘மங்கள’ தான் இலங்கைக்கு இருந்த ஒரேயொரு உண்மையான தாராளவாத தலைவர்.அவரின் இழப்பு தாங்கமுடியாத இழப்பாகும்’.

எனக்கு ‘மங்கள’ மரணிக்கவில்லை என்றே தோன்றுகின்றது.

சிலமனிதர்கள் வாழும்போதும் உயிரோடு இல்லை.ஆனால் ‘மங்கள’ என்பவர் மரணித்தபின்பும் எழுந்திருக்கக்கூடிய பெரும் தலைவர்.

 ‘மங்கள’ வின் தாராளவாத பாத்திரத்தை முன்னெடுத்துச் செல்வது ‘மங்கள’ அளிக்கக்கூடிய மிகப்பெரிய மரியாதையாகும்.’மங்கள’ அதற்கு வழி வகுத்திருக்கிறார் என நினைக்கிறேன்.

ஒரு சிறிய ஓய்வை எடுத்துக்கொள் ‘மங்கள’…………….

நீ சென்ற பாதையின் விரைவில் மீண்டும் சந்திப்போம்........

ලිපිය - සරෝජ් පතිරණ, 2021 අගෝස්තු 24

පරිවර්තනය: AKBAR RAFEEK

3 கருத்துரைகள்:

அருமையான பதிவுகள்,மங்கள உண்மையிலேயே மக்கள் மத்தியில் மங்களமாகவே தோன்றினார்.அவரின் கனவுகளை அவருடைய ஆதரவாளர்களும் நண்பர்களும் நிறைவேற்றி வைப்பார்களா?

One of the best politician.we missed him.

Post a Comment