Header Ads



தீங்கு செய்ய மாட்டோம் என்ற உறுதிப்பாட்டை, தொடர்ந்து மதிக்குமாறு தலிபான்களைக் கோரும் இலங்கை அரசாங்கம்


இப்போது தலிபான் ஆட்சியில் இருப்பதால், சட்டம் மற்றும் ஒழுங்கு நிலைமையை உறுதிப்படுத்தவும், ஆப்கானிஸ்தானில் உள்ள அனைத்து மக்களின் பாதுகாப்பு மற்றும் கௌரவத்தை பாதுகாக்கவும் இலங்கை அரசாங்கம் கோரிக்கை விடுக்கிறது என்று வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

இது தொடர்பில் அமைச்சு வெளியிட்ட அறிக்கையிலேயே மேற்குறிப்பிட்ட விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்ததாவது,

இஸ்லாமிய பாரம்பரியத்தைப் பின்பற்றி ஆப்கானிஸ்தானில் பெண்கள் வேலை செய்யலாம் மற்றும் பெண்கள் பாடசாலைக்குச் செல்லலாம் என்று தலிபான்கள் அளித்த உறுதிமொழிகளைக் கண்டு இலங்கை அரசாங்கம் மகிழ்ச்சியடைகிறது.

தலிபான்கள் பொதுமன்னிப்பு வழங்குவதாகவும், எந்த வெளிநாட்டினருக்கும் தீங்கு செய்ய மாட்டோம் என்று உறுதியளித்ததையும், அந்த உறுதிப்பாட்டை தொடர்ந்து மதிக்குமாறு தலிபான்களைக் கோருவதையும் இலங்கை அரசாங்கம் மகிழ்ச்சியடைகிறது என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், ஆப்கானிஸ்தானில் உள்ள மொத்த 86 இலங்கையர்களில் இதுவரை 46 பேர் வெளியேற்றப்பட்டுள்ளனர். 

இன்றைய நிலவரப்படி, 20 இலங்கையர்கள் ஆப்கானிஸ்தானிலிருந்து திரும்புவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

வெளிவிவகார அமைச்சு அவர்களை வெளியேற்றுவதற்கான ஏற்பாடுகளைச் செய்து வருகிறது. 

இதேவேளை, 20  இலங்கையர்கள் ஆப்கானிஸ்தானில் தங்குவதற்கு விருப்பம் தெரிவித்துள்ளனர்.

ஆப்கானிஸ்தானில் உள்ள இலங்கையர்களின் பாகாப்பை உறுதிப்படுத்துமாறும் அவர்கள் பாதுகாப்பாக வெளியேற்றுவதற்கு உதவுமாறும் அமெரிக்கா, இங்கிலாந்து, இந்தியா, பாகிஸ்தான் அரசாங்கங்களையும்  ஐக்கிய நாடுகள் சபையையும் வெளிவிவகார அமைச்சு கோரியுள்ளது.

2 comments:

  1. 1500 ஆண்டுகள் பழைமைவாய்ந்த 180 அடி உயரமான பாமியன் புத்தர் சிலைகளை தலிபான்கள் உடைத்தழிதமை பற்றிய இலங்கை அரசின் கருத்து என்ன?

    ReplyDelete
  2. உறுதி ப் பா டு? =வாக்குறுதி என்றால் என்ன? அதன் தாற்பரியம் தெரியுமா உங்களுக்கு?

    ReplyDelete

Powered by Blogger.