Header Ads

ஆப்கானிஸ்தான் ஜனாதிபதி மாளிகையை, தலிபான்கள் கைப்பற்றினர்

ஆப்கானிஸ்தானில் உள்ள அதிபர் மாளிகையின் கட்டுப்பாட்டை தாலிபன்கள் எடுத்துக் கொண்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

எனினும், அங்கு களத்தில் உள்ள முழுமையான தகவலை அறிய முடியவில்லை.

உள்ளூர் செய்தியாளர் பிலால் சர்வாரி பிபிசியிடம் கூறும்போது, அரசு தரப்புடன் நேரடி பேச்சுவார்த்தையில் ஈடுபட்டிருந்த இரண்டு அப்கானியர்களிடம் பேசியதில் இருந்து அமைதியான முறையில் ஆட்சியை ஒப்படைத்து விட பேச்சுவார்த்தை நடந்த வேளையில், அதிபரும் அவரது அமைச்சரவையின் மூத்த தலைவர்களும் நாட்டை விட்டு வெளியேறி விட்டதாக தெரிவித்ததாக குறிப்பிட்டார்.

இந்த நிலையில், ஆப்கன் அரண்மனையை கைப்பற்றிய பிறகு, அங்கு பணியாற்றிய ஊழியர்களிடம் உடனடியாக காலி செய்யுமாறு தாலிபன்கள் வற்புறுத்தியதாக அங்கு பணியாற்றிய ஊழியர்கள் கூறினர்.

அதிபரின் மாளிகையை தங்களின் கட்டுப்பாட்டில் எடுத்துக் கொண்ட தகவலை தாலிபன்கள் ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திடம் உறுதிப்படுத்தியிருக்கிறார்கள்.

ஆனால், இது தொடர்பான தகவல்கள், அந்நாட்டு அரசு தரப்பு அதிகாரிகளிடம் இருந்து இன்னும் வெளிவரவில்லை. BBC

2 comments:

  1. வெள்ளை ஆட்சி ஒடுக்குபவர்கள் எப்போதுமே அப்படித்தான்.
    அவர்கள் தங்கள் கட்டளைகளுக்கு ஏற்ப மக்களையும் நாட்டையும் நிர்வகிக்க தங்கள் அரக்கர்களுக்கு இத்தகைய அரண்மனை குடியிருப்புகளை கட்டியுள்ளனர். ஆப்கானிஸ்தான் போன்ற ஒரு ஏழை வளர்ச்சியடையாத தேசத்திற்கு வெள்ளையனின் உதவியாளர்கள் வாழ இத்தகைய இடங்கள் தேவையா? இந்த ஜனாதிபதி மாளிகையை உடனடியாக மருத்துவமனை அல்லது நூலகமாக தலைபான் ஆட்சி மாற்ற வேண்டும், இன்ஷா அல்லாஹ். தலைபான் ஆட்சி ஆப்கானிஸ்தானுக்கு மக்களுக்கும்
    சிறந்தது, இன்ஷா அல்லாஹ்.
    Noor Nizam - Convener "The Muslim Voice".

    ReplyDelete
  2. வெள்ளை ஆட்சி ஒடுக்குபவர்கள் எப்போதுமே அப்படித்தான்.
    அவர்கள் தங்கள் கட்டளைகளுக்கு ஏற்ப மக்களையும் நாட்டையும் நிர்வகிக்க தங்கள் அரக்கர்களுக்கு இத்தகைய அரண்மனை குடியிருப்புகளை கட்டியுள்ளனர். ஆப்கானிஸ்தான் போன்ற ஒரு ஏழை வளர்ச்சியடையாத தேசத்திற்கு வெள்ளையனின் உதவியாளர்கள் வாழ இத்தகைய இடங்கள் தேவையா? இந்த ஜனாதிபதி மாளிகையை உடனடியாக மருத்துவமனை அல்லது நூலகமாக தலைபான் ஆட்சி மாற்ற வேண்டும், இன்ஷா அல்லாஹ். தலைபான் ஆட்சி ஆப்கானிஸ்தானுக்கு மக்களுக்கும்
    சிறந்தது, இன்ஷா அல்லாஹ்.
    Noor Nizam - Convener "The Muslim Voice".

    ReplyDelete

Powered by Blogger.