Header Ads



தலிபான்களை இலங்கை அங்கீகரித்ததா..? ஐக்கிய தேசிய கட்சி கேள்வி


ஆப்கானிஸ்தானில் தலிபான்களை ஆட்சியை, அதிகாரப்பூர்வமாக அங்கீகரிக்கும் இலங்கை அரசாங்கத்தின் முடிவு குறித்து ஐக்கிய தேசிய கட்சி கேள்வி எழுப்பியுள்ளது.

ஊடகங்களுக்கு இது தொடர்பில் ஐக்கிய தேசியக்கட்சி, அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

ஐக்கிய தேசியக்கட்சியின் உறுப்பினர் சுதத் ஜயசுந்தர, இந்த அறிக்கையை வெளியிட்டுள்ளார்.

இலங்கை அரசாங்கம் தலிபான்களை அங்கீகரித்ததன் அடிப்படையில், தீவிரவாத குழு ஒன்று அதிகாரத்திற்கு வந்ததை முதலில் அங்கீகரித்த நாடுகளில், இலங்கையும் உள்ளடங்கியுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

உலகின் பல நாடுகள், எச்சரிக்கையுடன் நடந்து கொண்டிருக்கின்றன. அத்துடன் ஆப்கானிஸ்தான் நாட்டில் அதிகாரப்பூர்வமாக நிர்வாகத்தை உருவாக்காத ஒரு குழுவை, இலங்கை அரசாங்கம் அங்கீகரித்துள்ளமை குறித்து அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

2001 ல் ஐக்கிய நாடுகள் சபையால் அங்கீகரிக்கப்பட்ட சர்வதேச தலைமையிலான கூட்டணியால், தலிபான்கள் அதிகாரத்திலிருந்து அகற்றப்பட்டனர். அந்த நேரத்தில் அமெரிக்காவில் 9/11 தாக்குதலுக்கு காரணமான அல்கொய்தா போன்ற பயங்கரவாத அமைப்புகளுக்கு அடைக்கலம் வழங்க தலிபான் பொறுப்பாக இருந்தது.

இன்றுவரை தலிபான்கள் அல்-கொய்தா போன்ற பயங்கரவாத அமைப்புகளுடன் உறவை கைவிடவில்லை, இந்தநிலையில் அவர்களின் அதிகாரத்தை, இலங்கை அரசாங்கம், ஏற்றுக்கொள்வது, பயங்கரவாத அமைப்புகளை ஊக்குவிக்கும் செயலாகும். பயங்கரவாதக் குழுக்களால் பாதிக்கப்பட்டுள்ள ஒரு நாடாக, இலங்கை அரசாங்கம் எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டியது அவசியம்.

ஆப்கானிஸ்தானில் புத்தர் சிலைகளை அழிப்பதற்கு காரணமான ஒரு குழுவை, ஏன் இலங்கை அரசாங்கம் அங்கீகரித்தது என்றும், ஐக்கிய தேசியக்கட்சியின் உறுப்பினர் சுதத் ஜயசுந்தர கேள்வி எழுப்பியுள்ளார். தலிபான்கள் தொடர்ந்து பெண்களிடம் தவறாக நடந்து கொள்வது குறித்தும் ஜெயசுந்தர கவலை தெரிவித்துள்ளார்.

இந்தநிலையில் தலிபான்களை அங்கீகரிப்பதற்கான இலங்கை அரசாங்கத்தின் முடிவு, சரியான ஆலோசனை இல்லாமல் அவசரமாக எடுக்கப்பட்டுள்ளது. இது சர்வதேச அரங்கில் இலங்கையை கேலிக்குள்ளாக்கும் செயலாகும் என்றும் ஐக்கிய தேசியக் கட்சி உறுப்பினர் தெரிவித்துள்ளார். 

3 comments:

  1. LTTE ஐ மட்டும் இந்திரா ஆதரிக்கலாம்.

    ReplyDelete
  2. ஆப்கானிஸ்தானை அங்கீகரித்தால்தான் நாம் இருக்கும் நிலையில் கொஞ்சம் கடனாவது வாங்கிக் கொள்ளலாம்.அதற்காக ஆப்கானை இலங்கை அங்கீகரிக்க வேண்டும்.

    ReplyDelete
  3. A to Z THERIYATHA MOOTU BALAIWAL.9/11ATTACK AL QAIDA WAAM.MODAYA

    ReplyDelete

Powered by Blogger.