Header Ads



நீர்கொழும்பில் கொரோனாவினால் மரணிப்பவர்களின், வீதத்தை குறைப்பது குறித்து ஆலோசனை


- Ismathul Rahuman -

நீர்கொழும்பு சுகாதார வைத்திய பிரிவில் கோவிட் 19 வைரஸ் தொற்றின் தற்போதைய நிலமை, அதன் பரவலை கட்டுப்படுத்துவற்கு எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பாக இராஜாங்க அமைச்சர் நிமல் லான்சா தலைமையில் நீர்கொழும்பு மாநகர சபை மண்டபத்தில் இடம் பெற்ற விஷேட கலந்துரையாடல் கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

நீர்கொழும்பு சுகாதார பிரிவில் ஏப்ரல் 16 ம் திகதிக்குப் பின்னர் 89 கொறோனா மரணங்கள் நிகழ்ந்துள்ளதுடன் 3827 பேர் தொற்றுக்கு உள்ளாகியுள்ளனர். 2800 பேர் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். 

இக் கலந்துரையாடலில் நீர்கொழும்பு முதல்வர் தயான் லான்சா, நீர்கொழும்பு மாவட்ட பொது வைத்தியசாலை பணிப்பாளர் டாக்டர் நிர்மலா லோகநாதன், சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் சமீர, பிரதேச செயலாளர் அய்ஷா பத்திரன, உதவி பொலிஸ் அத்தியட்சகர் நாலக. சேனாநாயக்க, நீர்கொழும்பு பொலிஸ் நிலைய தலைமை பொறுப்பதிகாரி உதயகுமார வுட்லர், பொது சுகாதார பரிசோதகர்கள் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் கலந்து கொண்ட இக் கலந்துரையாடலில் கொரோனாவினால் மரணிக்கும் வீதத்தை குறைப்பதற்கும்,வேகமாக பரவிவரும் கோவிட் 19 வைரஸை கட்டுப்படுத்த தேவையான நடவடிக்கைகளை தீவிரமாக எடுக்குமாறு உரிய அதிகாரிகளுக்கு ஆலோசனைகளை வழங்கினார்.

கொரோனா தொற்றுக்கு உள்ளாகியுள்ள தொற்று நோய்னால் பீடிக்கப்பட்டுள்ள 65 வயதிற்கு மேற்பட்டவர்களை வீடுகளிலேயே தனிமைப்படுத்தும்

போது சிகிச்சை பெறுவதிலுள்ள முட்டுக்கட்டைகளை நீக்கி தேவையான சிகிச்சையை வழங்க இடைநிலை சிகிச்சை நிலயங்களுக்கு அல்லது வைத்தியசாலைகளுக்கு உடணடியாக அனுப்ப ஏற்பாடு செய்ய வேண்டும்.

நீர்கொழும்பு மாநகர சபையின் சுகாதாரப் பிரிவில் 24 மணி நேரமும் இயங்கும் கோவிட் தகவல் மையத்திற்கு கிடைக்கும் தகவல்களில் 65 வயதிற்கு மேற்பட்டவர்களை இனம்கண்டு அவர்களுக்கு அவசரமாக சிகிச்சை அளிக்க ஏற்பாடுசெய்தல். இதற்காக பொது சுகாதார பரிசோதகர்கள், கிராம உத்தியோகத்தர்கள், பாதுகாப்பு பிரிவினரின் ஒத்துழைப்பைப் பெறுதல்.

60 வயதிற்கு மேற்பட்டவர்களுக் தடுப்பூசி ஏற்றும் திட்டத்தை துரிதப்படுத்தி அவர்களின் வீடுகளுக்குச் சென்று தடுப்பூசி ஏற்றுவதை பலப்படுத்தல், அதற்கு தேவையான போக்குவரத்து வசதிகளை நகரசபை மூலம் பெற்றுக்கொள்ளல் போன்ற தீர்மாணங்கள் எடுக்கப்பட்டன.

No comments

Powered by Blogger.