Header Ads



வீட்டிலிருந்து வெளியேற வேண்டாம் - புதிய சுகாதார வழிகாட்டல்களை வெளியிட்டது அரசாங்கம்


இலங்கையில் டெல்டா வைரஸ் அதிவேகமாக பரவி வருவதால் மக்கள் பின்பற்ற வேண்டிய புதிய சுகாதார வழிகாட்டல்களை அரசாங்கத் தகவல் திணைக்களம்  வெளியிடுள்ளது.

அந்த வகையில்,பின்வரும் சுகாதார வழிகாட்டல்களை கட்டாயம் பின்பற்றுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

 அனைத்துக்கும் முதலில் மிக விரைவாக கொவிட் தடுப்பூசிகளை பெற்றுக் கொள்ளவும். உலகில் அநேகமானோரின் உயிர் காப்பாற்றப்பட்டிருப்பது கொவிட் தடுப்பூசிகளை பெற்றுக் கொண்டமையினாலேயேயாகும்.

 அத்தியாவசிய தேவைக்கேயன்றி வீட்டிலிருந்து வெளியில் செல்ல வேண்டாம்.

 மக்கள் ஒன்று கூடுகின்ற திருமண வைபவங்கள், மரண வீடுகள் மற்றும் இதர உற்சவங்களில் பங்குபற்றுவதை முழுமையாக தவிர்த்துக் கொள்ளவும்.

 பொது இடங்களுக்கு செல்லும் போது கட்டாயமாக முகக்கவசம் அணிந்து கொள்ளுங்கள்.

 அறைகள், மண்டபங்கள், மின்தூக்கி, வாகனங்கள் போன்ற மூடப்பட்ட இடங்களில் சனங்களுடன் ஒன்று சேர வேண்டாம்.

 அடிக்கடி சவர்க்காரமிட்டு இரு கைகளையும் கழுவிக் கொள்ளவும்.

 மற்றவர்களுடன் இரு மீற்றர் சமூக இடைவெளியினை பேணவும்.

 நாட்பட்ட நோய்கள் இருப்பின் தொழிலுக்காகவன்றி வீணாக வீட்டை விட்டு வெளியில் செல்ல வேண்டாம்.

 உங்களது மற்றும் உங்களது அன்புக்குரியவர்களின் உயிரைக் காப்பாற்றுவதை பிறருக்கு வழங்காது, உங்களுடைய பொறுப்புக்களை சரிவர நிறைவேற்றி உங்களையும்,குடும்பத்தையும் பாதுகாத்துக் கொள்ளவும்.

என அரசாங்கத் தகவல் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது. 

No comments

Powered by Blogger.