Header Ads



கொவிட் நிலைமைக்கு முன்னதான நுரையீரல் சிக்கல் தொடர்பில் முதல் தடவையாக இலங்கையில் கண்டுபிடிப்பு

கொவிட் நியூமோனியா நிலைமைக்கு முன்னதாக நுரையீரல்களில் ஏற்படும் சிக்கல்கள் தொடர்பில் முதற்தடவையாக இலங்கை கண்டறிந்துள்ளது.


கொவிட் தொற்றினால் மரணித்தவர்களின் பிரேத பரிசோதனைகளில் நுரையீரல் சிக்கல் நிலை கண்டறியப்பட்டுள்ளது.

அந்த நோயினை தேசிய தொற்று நோயியல் நிறுவகம் மற்றும் கொழும்பு கிழக்கு ஆதார வைத்தியசாலையின் விசேட சட்ட வைத்திய அதிகாரி சன்ன பெரேராவினால் அடையாளம் காணப்பட்டுள்ளது.

இந்த நியூமோனியா நோய் நிலைமைக்கு முன்னதாக ஏற்படும் நுரையீரல் சிக்கலானது எக்கியூட் லிம்போஸிட்டிக் இன்ரஸ்ட்ரீஸல் நிவ்மோ நைன்டீஸ் என கண்டறியப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுளளார்.

கொவிட் - 19 தொற்றுறுதியாகும் ஆரம்ப காலப்பகுதியிலேயே குறித்த நுரையீரல் சிக்கலை முதற்கட்ட அறிகுறியாக அறிந்துக்கொள்ள முடியும் என தேசிய தொற்று நோயியல் நிறுவகம் மற்றும் கொழும்பு கிழக்கு ஆதார வைத்தியசாலையின் விசேட சட்ட வைத்திய அதிகாரி சன்ன பெரேரா தெரிவித்துள்ளார்.

No comments

Powered by Blogger.