Header Ads



ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்காவைச் சேர்நத கடைசி நபரும் வெளியேறும் வரை அமெரிக்கப் படைகள் அங்கு இருக்கும்


ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்காவைச் சேர்நத கடைசி நபரும் வெளியேறும் வரை அமெரிக்கப் படைகள் அங்கு இருக்கும் என அதிபர் ஜோ பைடன் கூறியுள்ளார்.

ஏபிசி தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் ஜோ பைடன் இதைத் தெரிவித்தார்.

"ஆகஸ்ட் 31-ஆம் தேதிக்குள் அனைவரையும் மீட்பதற்கு முயற்சி செய்வோம். இல்லாவிட்டால் அங்கேயே தங்கியிருந்து மீட்புப் பணிகளை முடிப்போம்" என்று ஜோ பைடன் தெரிவித்தார்.

சுமார் 10 ஆயிரம் முதல் 15 ஆயிரம் வரையிலான அமெரிக்கர்கள் ஆப்கானிஸ்தானில் இன்னும் தங்கியிருப்பதாக மதிப்பிடப்படுகிறது.

இவர்கள் தவிர அமெரிக்காவுக்காகப் பணியாற்றிய சுமார் 50 ஆயிரம் முதல் 65 ஆயிரம் வரையிலான ஆப்கானியர்களையும் மீட்பதற்குத் திட்டமிடப்பட்டிருப்பதாக பைடன் தெரிவித்தார்.

தாலிபன்கள் இந்த வேகத்தில் முன்னேறுவார்கள் என்று யாரும் எதிர்பார்த்திருக்க முடியாது என்றும் ஏபிசிக்கு அளித்த பேட்டியில் ஜோ பைடன் கூறினார்.

1 comment:

  1. எனக்கு ஒரு சந்தேகம் முஸ்லீம் நாடுகள் ஏன் இந்த மக்களை ஏற்றுக் கொள்ள கூடாது? வௌ்ளைகாரன் வௌ்ளை காரன்தான் கிருஸ்தவா்கள்

    ReplyDelete

Powered by Blogger.