Header Ads



ஜே.எஸ்.கே.ஏ.ஏ.எச்.மௌலானா எழுதிய 'பாலை வனம்' நூல் வெளியீட்டு விழா


(எம்.எஸ்.எம்.ஸாகிர்)

ஈழமணித்தீவின் தென்கரை வெலிகமையைச் சேர்ந்த, பன்னூலாசிரியரும் தீந்தமிழ்ப் புலவருமான,  மெய்ஞ்ஞானத் தமிழ்ஞானி, மூத்த இலக்கிய ஆளுமை ஜமாலிய்யா அஸ்ஸெய்யித் கலீல் அவ்ன் மௌலானா (ஜே.எஸ்.கே.ஏ.ஏ.எச். மௌலானா) இயற்றிய சங்க இலக்கிய உரை நூலான (ஐங்குறுநூறு வரிசையில் பாலைப் பாடலுக்கான உரை நூலான) 'பாலை வனம்' நூல் வெளியீட்டு விழா இன்று  (28)  சனிக்கிழமை மாலை 5 மணி முதல் 7:30 மணிவரை ZOOM செயலி மூலம் இணைய வாயிலாக நடைபெறவுள்ளது.

ஏகத்துவ மெய்ஞ்ஞான சபையின் அங்கமான, ஏகத்துவ மெய்ஞ்ஞானத் தமிழ்ச் சங்கத்தின் ஏற்பாட்டில், அஸ்ஸெய்யித் ஏ. மஸ்ஊத் மௌலானா தலைமையில் இடம்பெறும் இவ்விழாவில், முதற்பிரதியை அஸ்ஸெய்யித் எம். யாஸீன் மௌலானா பெற்றுக் கொள்கிறார். நிகழ்வில், அஹ்லுல் பைத்தினர் மற்றும் கலீபாக்கள் முன்னிலை வகிப்பதோடு, அறிமுகஉரை ஏகத்துவ மெய்ஞ்ஞானத் தழிழ் சங்கத்தின் தலைவர் மௌலவி எஸ். ஹுஸைன் முஹம்மது, வரவேற்புரை கவிஞர். கிளியனூர் இஸ்மத், அணிந்துரை சிங்கப்பூர் எழுத்தாளர், புதுமைத்தேனீ மா.அன்பழகன், வாழ்த்துரை அருங்கவிஞர் வா.மு. சேதுராமன், நூல் ஆய்வுரை ராஜ் டி.வி. அகடம் - விகடம் புகழ், கவிமாமணி பேராசிரியர் முனைவர் தி.மு. அப்துல் காதர், மதிப்புரை முனைவர் தமிழ்த்துறைத் தலைவர் ஹ.மு. நத்தர்ஷா, பாராட்டுரை கலாபூஷணம் ஞானம் பிரதம ஆசிரியர் தி.ஞானசேகரன் (இலங்கை), வாழ்த்துரை சென்னையின் சுன்னத் ஜமாஅத் பேரவையின்; தலைவர் முனைவர் மௌலவி எம்.ஷேக் அப்துல்லாஹ் ஜமாலி, நன்றியுரை ஏகத்துவ மெய்ஞ்ஞான சபையின் சர்வதேச தலைவர் கலீபா. முனைவர். ஏ.பீ. ஸஹாப்தீன் ஆகியோர் உரையாற்றவுள்ளனர். நிகழ்ச்சி நெறியாள்கையை முனைவர் எஸ். முரளி அரூபன் மேற்கொள்கிறார்.

ஏற்கனவே நூலாசிரியரின் குறிஞ்சிப் பாடலுக்கான உரை நூல் கடந்த 2013 ஆம் ஆண்டு 'குறிஞ்சிச் சுவை' எனும் பெயரில் தென்னிலங்கை வெலிகமையில் வெளியிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

zoom  செயலி அரங்கு எண்- 447 085 0123 மற்றும் கடவுச்சொல் - 135790  ஐ  பயன்படுத்தி ஆர்வலர்கள் யாரும் விழாவில் இணைந்து கொள்ள முடியும் என அனைவருக்கும் ஏற்பாட்டுக்குழுவினர் திறந்த அழைப்பு விடுத்துள்ளதாக இந்நிகழ்ச்சியின் சந்தைப்படுத்தல் பிரதிநிதி எப்.ஆர். முஹம்மத் தெரிவித்தார்.

No comments

Powered by Blogger.