Header Ads



தொற்று நோயியல் பிரிவு தோல்வியடைந்துவிட்டது - ஜனாதிபதிக்கு கடிதம்


இலங்கையின் தொற்று நோயியல் பிரிவு, பொறுப்பேற்க வேண்டிய ஆறு பணிகளிலும் தோல்வியடைந்துள்ளதாக அரச மருத்துவ அதிகாரிகள் சம்மேளனம் குற்றம் சுமத்தியுள்ளது.

தொற்று நோயைக் கட்டுப்படுத்துவதற்கான ஒரு பொது சுகாதார மூலோபாயத்தை செயல்படுத்துவதற்கு நம்பகமான நிகழ்வு நேர தரவு, மிக முக்கியமான காரணி என்பதை தாம் மீண்டும் மீண்டும் சுட்டிக்காட்டியதாக சம்மேளனம் தெரிவித்துள்ளது.

இருப்பினும், நோய் கண்காணிப்பு, பரவல், கட்டுப்பாடு, தடுப்பூசி ஒருங்கிணைப்பு, மருத்துவ மேலாண்மை, செயல்பாட்டு ஆராய்ச்சி, கண்காணிப்பு மற்றும் மதிப்பீடு போன்ற பொறுப்புள்ள ஆறு பணிகளிலும் தொற்றுநோயியல் பிரிவு தோல்வியடைந்துள்ளது என்று சம்மேளனம், ஜனாதிபதிக்கு எழுதியுள்ள கடிதம் ஒன்றில் சுட்டிக்காட்டியுள்ளது.

எனவே தற்போதைய நிலைமையைக் கருத்தில் கொண்டு, இந்த பணிகளை பொது சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ஆர்னோல்ட்க்கு வழங்குமாறு அரச மருத்துவ அதிகாரிகள் சம்மேளனம் ஜனாதிபதியிடம் வலியுறுத்தியுள்ளது.

இந்த 6 பணிகளையும் செய்ய அவருக்கு கீழ் ஆறு குழுக்களை நியமிக்கவேண்டும் என்றும் சம்மேளனம் கோரியுள்ளது.

ஏற்கனவே அரச மருத்துவ அதிகாரிகள் சம்மேளனம், தொற்று நோயியல் பிரிவை கடுமையாக விமர்சித்ததுடன், அதன் முன்னாள் தலைவர் வைத்தியர் சுதத் சமரவீரவுக்கு எதிராகவும் ஜனாதிபதியுடனான சந்திப்பின் போது குரலெழுப்பியது. இதனையடுத்து சுதத் சமரவீர பதவி நீக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.  Twin

No comments

Powered by Blogger.