Header Ads



கொரோனா தடுப்பூசிக்காக நின்றவர்கள் மீது குத்திய தேனீக்கள் - ஓட்டமெடுத்த அதிகாரிகளும், மக்களும்..!!


கொரோனா தடுப்பூசி மையத்திலிருந்த இரண்டு தேன் கூடுகள் கலைந்து  தேனீக்கள் கொட்டியதால், தடுப்பூசி பெற வரிசையில் காத்திருந்த மக்களும் தடுப்பூசி கொடுக்கும் அதிகாரிகளும் தங்கள் பாதுகாப்புக்காக ஓட்டமெடுத்துள்ளனர்.

இந்தச் சம்பவம் கட்டுநாயக்க, அவரிவத்தை சுமித்திரராம விகாரையில் இன்று (18) பிற்பகல் இடம்பெற்றுள்ளது.

தடுப்பூசியைப் பெற்றுக் கொள்வதற் பெற இரண்டு வரிசையில் சுமார் 4,000 பேர் காத்துக் கொண்டிருந்த சமயத்தில், விகாரையில் இருக்கும் சிலையின் பாதுகாப்புக்காக அமைக்கப்பட்டிருந்த கூரையில் கட்டப்பட்டிருந்த தேன் கூடுகள் கலைந்ததாலேயே இந்த அசம்பாவிதம் இடம்பெற்றுள்ளது.

குப்பைகளுக்கு தீ வைத்து எரிக்கப்பட்டதால் ஏற்பட்ட புகை மற்றும் தடுப்பூசி பெற வந்தவர்களின் சத்தத்தின் காரணமாக தேன் கூடு கலந்திருக்கலாம் என்று தெரிவிக்கப்படுகிறது.

கட்டுநாயக்க பொலிஸார் சம்பவ இடத்துக்கு விரைந்து நிலைமையைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்த பின்னர், நண்பகல் 12.00 மணியளவில் தடுப்பூசி வழங்கும் திட்டம் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டது. 

தேனீக்களின் தாக்குதலில் பாதிக்கப்பட்ட சிலர் மேலதிக மருத்துவ சிகிச்சைக்காக அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர்.

- ரி.கே.ஜி.கபில -


No comments

Powered by Blogger.