Header Ads



ஆட்சியை கைப்பற்ற திட்டம் வகுக்கும் ரணில்


ஆட்சியை கைப்பற்றும் நோக்கில் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க இந்த நாட்களில் புதிய திட்டத்தை வகுத்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

கொழும்பு சிங்கள ஊடகம் ஒன்று வெளியிட்டுள்ள செய்தியில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஐக்கிய தேசியக் கட்சியின் 75வது ஆண்டு விழா செப்டம்பர் 6ம் திகதி வருகின்றது.

இதன்போது தற்போது ஒரே ஒரு நாடாளுமன்ற இடத்திற்கு மட்டுப்படுத்தப்பட்டிருக்கும் ஐக்கிய தேசியக் கட்சி, இந்த நாட்டில் அதிகாரத்தை மீண்டும் பெறுவதற்கான திட்டத்தை முன்வைக்கும் என்று ரணில் விக்கிரமசிங்க குறிப்பிட்டுள்ளார்.

ஐக்கிய தேசியக் கட்சியில் இளைஞர்கள் மத்தியில் உரையாற்றிய அவர் இதனை கூறியுள்ளார்.

தற்போதைய சூழ்நிலையை மாற்றும் திறன் எதிர்க்கட்சியில் உள்ள எந்த கட்சிக்கும் இல்லை எனவும் ரணில் விக்கிரமசிங்க இதன் போது சுட்டிக்காட்டியுள்ளார்.

1956ம் ஆண்டு 8 இடங்களை இழந்த ஐக்கிய தேசியக் கட்சி எவ்வாறு நாட்டில் மீண்டும் ஆட்சியைப் பிடித்தது என்பதையும் அவர் இளைஞர்களுக்கு நினைவூட்டியுள்ளார்.

3 comments:

  1. அப்போ.....

    இன்னொரு மைத்திரி வரப்போறாருன்னு சொல்லுங்கோ.............

    ReplyDelete
  2. நாட்டு மக்களின் கவனத்தைச் திசை திருப்ப பெரிய மச்சானின் தந்திராலோசனையை செயல்படுத்தும் கொன்டாக்ட் இந்த நரித்தந்திரகாரனுக்கு வழங்கப்பட்டிருக்கின்றது. இந்த போக்கிரியின் சூழ்ச்சிக்கு மக்கள் அகப்படுவார்களா?

    ReplyDelete
  3. இவருக்கு அப்பச்சியுமில்லை.

    ReplyDelete

Powered by Blogger.