Header Ads



ஹிஷாலியின் சடலம் ஜெப வழிபாடுகளுடன், மீண்டும் புதைக்கப்பட்டது


எரிகாயங்களுக்கு உள்ளான நிலையில், மரணனமடைந்த  டயகமவைச் சேர்ந்த 16 வயதான சிறுமி ஜூட்குமார் ஹிசாலியின் சடலம், இரண்டாவது தடவையாக இன்று (13) மாலை 6.57 மணிக்கு அடக்கம் செய்யப்பட்டது.

 நீதிமன்ற உத்தரவுக்கு அமைய நுவரெலியா நீதிமன்ற நீதவான்  திருமதி லுசாக்காகுமாரி தர்மகீர்த்தி முன்னிலையில் மூன்று சிரேஸ்ட சட்டவைத்தியர்கள் ஊடாக சிறுமி ஹிசாலினியின் உடல் அடங்கிய சவப்பெட்டி  ஜூலை மாதம் (30) ஆம் திகதி பகல் 12.20 மணிக்கு டயகம மேற்கு தோட்ட சவக்குழியிலிருந்து தோண்டியெடுக்கப்பட்டது.

இரண்டாவது முறையாக சிறுமியின் சடலத்தை பிரேத பரிசோதணைக்கு உட்படுத்த நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. அதனடிப்படையில் தோண்டப்பட்ட சடலம், பேராதனை போதனா வைத்தியசாலைக்கு அனுப்பிவைக்கப்பட்டது.

 இரண்டாவது தடவையாக  பிரேத பரிசோனைக்கு உட்படுத்தப்பட்டது. அதன்பின்னர்,   15 நாள்களுக்கு பின் (13)ஆம் திகதி வெள்ளிக்கிழமை மாலை 6.25 மணிக்கு மலர்சாலை வாகனத்தில் டயகம மேற்கு தோட்ட மயானத்திற்கு கொண்டுவரப்பட்டு பெற்றோர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

ஊர்மக்கள்,உறவினர்கள் மத்தியில் கண்டி மற்றும் டயகம பிரதேச கிறிஸ்தவ சமய குருமாரின் ஜெப வழிபாடுகளுடன் அதே புதைக்குழியில் மீண்டும் அடக்கம் செய்யப்பட்டது.

 ஆ.ரமேஸ், எஸ்.கணேசன்.துவாரக்க்ஷான்.


No comments

Powered by Blogger.