August 04, 2021

பால்மா பக்கட் வினோதம் - வியாபாரிகளே, அல்லாஹ்வின் தூதர் கூறியதை மறந்து விடாதீர்கள்


இன்று (04/08/20121) காரியாலயம் இருந்து வீடு வருகையில் சாய்ந்தமருது ஜும்ஆ பள்ளிவாசலுக்கு முன்னுள்ள நண்பர் சிராஜ் அவர்களின் பாமாசிக்கு Medicine ஒன்றை வாங்குவதற்கு வாகனத்தை நிறுத்திவிட்டு கடைக்குள் செல்கையில் வயோதிப பெண் ஒருவரும் அவசரமாக என் பின்னே பாமசிக்குள் நுளைந்துவிட்டார். அவரது தோற்றத்தை அவதானிக்கையில் பக்கத்தில் இருப்பர்தான் என்பதை புறிந்துகொண்டேன். அந்த நேரத்தில்தான் குறிப்பிட்ட பிரதேசத்தில் அன்கர் பால்மா பக்கட் விநியோக வாகனம் தன் விநியோக பொருட்களை கடைகளுக்கு கொடுத்துவிட்டு செல்வதையும் அவதானிக்க முடிந்தது. 

பின்னர் பாமசிக்கு வந்த அந்தப் பெண் "அன்கர் வாகனத்தைப் பார்த்துத்தான் தம்பி வந்த மத்த கடைகளில் மாப்பக்கட்டு இல்லை என்டுடாங்க ஒங்கள்ட்ட இருக்கா..?" என்று கேட்டார். சிரித்துக்கொண்டே இப்பதான் வந்த என்று புன்னகையுடன் பாமசி உரிமையாளர் 400g பக்கட்டை 370 ரூபாய்க்கு கொடுத்து அவரை அனுப்பி வைத்தார். அவரது சிரிப்பில் புறிந்துகொண்டேன் அயலில் உள்ள கடைக்காரர்களின் வக்கிர பேராசை புத்திகளை. பின்னர் உரிய Medicine யும் ஒரு பக்கட் அன்கரையும் வாங்கிவிட்டு சில விடையங்களை பேசிவிட்டும் வீடு திரும்புகையில் அருகில் உள்ள கடைக்காறர்களின் உண்மைத் தன்மையை அறிய அவர்களது கடைக்கும் சென்றேன். அதில் ஒரு கடை உரிமையாளர் அன்கர் நாளைதான் வருகுது என்றும் மற்றவர் இப்ப விலை கூடிட்டு பகட் 400 ரூபாய் என்றும் நளினமாக பதிலளித்தனர்.

ஆக மொத்தத்தில் இரு கடைக்காரர்கள் மனதிலும் பால்மாவில் விலையேற்றத்தை வைத்து கோடிஸ்வரர் ஆகலாம் என்ற பேராசையே தொக்கி நின்றதை உணர முடிந்தது. வியாபாரிகளே....

"யார் விலையை ஏற்றுவதற்காக வியாபாரம் செய்யாமல் பதுக்கி வைக்கின்றாரோ அவர் தவறிழைத்து விட்டார்'' என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: மஃமர் (ரலி)

நூல்: முஸ்லிம் 3012 


- Faisath Ahamed -


3 கருத்துரைகள்:

இப்படி வியாபாரம்செய்யும் சில முஸ்லிம்களை பார்த்துத்தான் மற்றவர்கள் ஒட்டுமொத்த முஸ்லிம்களையும் குற்றம்சாட்டி இனவாத பிரச்சாரம் செய்கின்றனர்.நம் முன்னோர் கண்ணியமாக, நேர்மையாக வியாபாரம் செய்தபடியால்தான் அப்போது அரசர்களின் திறைசேரி பொறுப்பாளர்களாக கூட நியமிக்கப்பட்டார்கள்.உங்களுக்கு வரும் கஸ்டங்கள் நீங்களாக தேடிக் கொண்டவைதான் என்பதை எமது இஸ்லாம் மார்க்கம் சொல்லித் தரும் பாடம்.படிப்பினை பெறுவார்களா கொள்ளை லாபமடிப்பவர்கள்? நியாஸ் இப்றாஹிம்.

இது Imaad Pharmacy க்காக கொடுத்த விளம்பரம் போல் தெரிகிறது. பற்றுச்சீட்டை இதில் போடவேண்டிய அவசியமில்லை

THis looks an advertisement for Siraj Pharmacy.

Post a Comment