Header Ads



முழு சம்பளத்தையும் வழங்கினால், என்னால் உயிர்வாழ முடியாது - டிலான் பெரேரா


என்னால் கொவிட் நிதியத்துக்கு முழுச் சம்பளத்தையும் வழங்க முடியாது என,  ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினரான டிலான் பெரேரா தெரிவித்தார்.

ஸ்ரீ லங்கா பொதுஜன முன்னணியின் தலைமையகத்தில் இன்று (25) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே, அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அங்கு தொடர்ந்துரைத்த அவர், கொவிட் நிதியத்துக்காக  தனக்கு அரைவாசி சம்பளத்தையே வழங்க முடியும் எனவும்  அவ்வாறு முழு சம்பளத்தையும் அளித்தால் தன்னால் உயிர்வாழ முடியாது எனவும் கூறினார்.

தனது தந்தை பினான்ஸ் நிறுவனத்தில் முதலிட்டதால் நட்டமடைந்தார் என்றும் அதனால் தனது முழுச் சம்பளத்தையும் நிதியத்துக்கு வழங்கிவிட்டால் தான் பொருளாதார பக்கத்தில் சிரமத்தை எதிர்கொள்ள நேரிடுமெனவும் அவர் தெரிவித்தார்.


2 comments:

  1. இந்த நபர் வௌிநாட்டுப் பணியகத்துக்குப் பொறுப்பான அமைச்சராக இருந்தபோது அங்கிருந்து கோடான கோடி பணத்தைக் கொள்ளையடித்ததாக பலமுறை செய்திகள் வௌிவந்தன.அந்த பணத்தின் அரைவாசியைக் கொடுத்தால் அல்லது அந்தப் பணத்தைப் பதுக்கி வைத்திருப்பவர் மூலமாக கோவிட் நிதிக்குச் செலுத்துமாறு அறிவுரை கூறலாம்.

    ReplyDelete
  2. YOU ARE 100% CORRECT.THIRD GRADE LIAR DILAN BILA PEPRERA.

    ReplyDelete

Powered by Blogger.