Header Ads



எத்தனை இலட்சம் பேர் வந்தாலும், உணவு அளிப்போம், பாதுகாப்போம், எங்களிடம் மிகப்பெரிய இதயம் இருக்கிறது - ஹசீனா


- Aazath Atham Lebbe -

வங்கதேசம் ஏழ்மையான நாடு தான். ஏற்கெனவே இருக்கிற மக்கள் வாழ்வதற்கே இடமில்லாமல் நெருக்கடியாக இருக்கிற நாடுதான். எங்களிடம் மற்ற நாடுகளைப் போல பணமில்லை. நாங்கள் பெரும் பணக்காரர்கள் இல்லை. மிகப் பெரும் எண்ணிக்கையில் மியான்மரிலிருந்து ரோஹிங்கியா இன மக்கள் அகதிகளாக வந்தவண்ணம் இருக்கிறார்கள். அவர்களை திரும்பிப் போகுமாறு எங்களால் சொல்ல முடியவில்லை. அவர்களை உள்ளே விடாதீர்கள் என்று பலரும் அறிவுரை சொல்கிறார்கள். அவர்கள் ஏழைகள். அந்தக் குழந்தைகளின் கண்ணீரை சகித்து கொள்ளமுடியவில்லை.

நாடிழந்து, வீடிழந்து, அனைத்தையும் இழந்து வெகுதூரம் நடந்தே எங்கள் எல்லைக்குள் வருகிற அந்த மக்களை சுட்டுத் தள்ள முடியாது.  இத்தனை லட்சம் பேருக்கு எப்படி உணவு அளிப்பீர்கள் என்று கேட்கிறார்கள். அமெரிக்கா உட்பட யாரிடமும் நாங்கள் கையேந்தப் போவதில்லை. 

எத்தனை இலட்சம் பேர் வந்தாலும் உணவு அளிப்போம்; பாதுகாப்போம். ஏனென்றால் எங்களிடம் மிகப் பெரிய இதயம் இருக்கிறது.” 

பங்களாதேஷ் பிரதமர் ஷேக் ஹசீனா அவர்களின் வால் ஸ்ட்ரீட் ஜர்னல் பத்திரிகைக்கு ரோஹிங்கியா மக்கள் பற்றிய கூறிய இக்கருத்து உலக  மக்களின் கவனத்தை ஈர்க்கிறது. 

அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்:

   "உலகில் துன்பத்தில் சிக்கியவரின் துன்பத்தை யார் நீக்குகிறாரோ அவருடைய மறுமையின் துன்பத்தை அல்லாஹுதஆலா நீக்கிவைக்கிறான். 

உலகில் ஒருவர் ஒரு முஸ்லிமுடைய குறையை மறைத்தால் மறுமையில் அவருடைய குறையை அல்லாஹுதஆலா மறைத்துவிடுவான். 

ஒருவன் தன் சகோதரருக்கு உதவி செய்து கொண்டிருக்கும் காலமெல்லாம் அல்லாஹுதஆலாவும் அவருக்கு உதவி செய்து கொண்டிருப்பான்."

என்று அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.(நூல்: முஸ்னத் அஹமத்

‎رواه احمد:٢ /٢٧٤)

3 comments:

  1. Bangladesh peoples panivu irakkam uthavum manappaanmai Kondavarkal.Allah immakkalin meethu Arul purivaanaaha.aameen.

    ReplyDelete
  2. ஏய் ஹசீனா உனக்கு இதயம் இருக்கா? அது எங்கே இந்தியா விலா? நீ ஒரு மோடி இன் இந்து வெறி கூட்டாளி ஆச்சே!

    ReplyDelete
  3. By this generosity Bangladesh will become a rich country IA

    ReplyDelete

Powered by Blogger.