August 07, 2021

பொதுஜன பெரமுன அரசாங்கத்தின் ஒருவருட கால சாதனைகள்


ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன, கூட்டுக்கட்சிகளுடன் ஒன்றிணைந்து 2020 ஆகஸ்ட் 5 ஆம் திகதி நடைபெற்ற பொது தேர்தலில் பாராளுமன்றத்தில் 3/2 பெரும்பான்மையை பெற்று வெற்றியடைந்து நேற்றுடன் ஒருவருடம் பூர்த்தியாகியுள்ளது. 

இத் தருணத்தில் அரசாங்கம் பல்வேறு சவால்களை எதிர்க்கொண்டு முன்னோக்கி செல்லும்போது அரசாங்கத்தின் செயல்கள் பலராலும் போற்றப்பட்டுள்ளது 

அதேவேளை அதற்கு எதிராக கல்லடியும், சொல்லடியும் விழுந்துக்கொண்டே இருக்கின்றது. 

2019 நவம்பர் 16 ஆம் திகதி நடைபெற்ற ஜனாபதி தேர்தலில் பெற்ற மாபெரும் வெற்றியை பலப்படுத்த வேண்டுமாயின், பொது தேர்தலில் உறுதியான ஆட்சியொன்றை உருவாக்க அதிகாரத்தை தருமாறு பொதுமக்களிடம் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அன்று கேட்டுக்கொண்டார். 

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவும், பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவும், அரசாங்கத்தின் கொள்கை பிரகடனத்திற்கு அமைய சௌபாக்கிய தொலைநோக்கு திட்டத்தினை வலுப்படுத்த மக்களிடம் இருந்து ஆதரவை கேட்டுக்கொண்டனர். இதற்கிணங்க பொது மக்கள் 3/2 பெரும்பான்மையை ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சிக்கு வழங்கினர். 

இந்நிலையில், இன்றைய அரசாங்கம் ஆட்சி அமைத்து ஒரு வருடகாலம் நிறைவுபெறும் இத்தருணத்தில் ஜனாதிபதி, பிரதமர் மற்றும் அரசாங்கத்திற்கு தங்களது ஆசிகளை வழங்குவதில் மகிழ்ச்சி அடைகிறோமென சர்வ மதத் தலைவர்கள் தமது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர். 

குறிப்பாக கொடிய வைரஸிலிருந்து மக்களை காப்பாற்ற இந்த அரசாங்கம் எடுத்த நடவடிக்கையை உலக சுகாதார ஸ்தாபனம் உட்பட பல சர்வதேச நாடுகள் பாராட்டியுள்ளன. எனவே நாங்களும் அதனை பாராட்டாமல் இருக்க முடியாது. தொடர்ந்தும் இதேபோன்று மக்கள் நலன் கருதி மக்களுக்காக இந்த அரசாங்கம் செயற்படும் என்ற நம்பிக்கையில் அரசியல் தலைமைகளுக்கு எங்களது மும்மணிகளின் ஆசிகளை கூறி நல்லாசிஅளிப்பதாக பௌத்த, இந்து, இஸ்லாமிய, கிறிஸ்தவ மதங்களின் சர்வமதத் தலைவர்கள் தெரிவித்துள்ளனர். 

2025 ஆம் ஆண்டின் தொழில் சந்தை வாய்ப்புகளுக்கு மாணவர்களை தயார்படுத்தும் வகையில் கல்விமுறையை சீர்செய்து இரண்டாம் நிலைக் கல்வியின் தரத்தை உயர்த்துவதை உறுதி செய்து கொள்ளும் பொருட்டு விஞ்ஞான, கணித, தொழில்நுட்ப மற்றும் வர்த்தகத் துறையை மேம்படுத்தல், மத்திய மற்றும் மாகாணப் பாடசாலைகள் புதிய சீர்திருத்தத்தை அடைந்து கொள்வதற்கான சக்தியை உருவாக்கல், இதனை வழிநடத்தும் முகாமைத்துவத்தின் கொள்ளளவை விருத்தி செய்தல் ஆகிய பெறுபேறுகளை அடைந்து கொள்ளும் வகையில் இத்திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது. 

சௌபாக்கிய தொலைநோக்கு திட்டத்தினால் மேற்கொள்ளப்பட்ட அபிவிருத்தி பணிகள் சில... 

* மீள் ஏற்றுமதி கையாளல் திறனை இரட்டிப்பாக்குவதற்கு கொழும்பு துறைமுகத்தை அபிவிருத்தி செய்தல். 

* கிழக்கு கொள்கலன் முனையத்தின் அபிவிருத்திப் பணிகளை முன்னிலைப்படுத்தி இலங்கை துறைமுக அதிகார சபையினால் மேற்கொள்ளல். 

* ஐக்கிய கொள்கலன் முனையத்தில் களஞ்சிய வசதிகளை நிர்மாணித்தல். 

* அரச மற்றும் தனியார் கூட்டுரிமையின் பங்களிப்புடன் (PPP) மேற்கு கொள்கலன் முனையத்தை அபிவிருத்தி செய்வதற்கு நடவடிக்கை எடுத்தல். 

* பிராந்திய மற்றும் தேசிய பொருளாதார தேவைப்பாடுகளுக்கு ஏற்ப காலி, காங்கேசன்துறை மற்றும் திருகோணமலை துறைமுகங்களை அபிவிருத்தி செய்தல். 

* யாழ்ப்பாணம் மற்றும் தீவுகளுக்கிடையே பாதுகாப்பாக பயணிகள் மற்றும் பொருட்கள் போக்குவரத்துக்காக சறுக்குவழி (Slipway) மற்றும் நிர்வாகக் கட்டிடத்தை நிர்மாணித்து நிறைவு செய்தல் மற்றும் பேருவளை மீன்பிடித் துறைமுகம் சார்ந்துள்ள சறுக்கு வழியை (Slipway) நிர்மாணித்தல் திட்டமிடுதல். 

* கப்பற் பணியினர் தொடர்பாக சர்வதேச ரீதியில் ஏற்றுக்கொள்ளக் கூடிய அடையாள அட்டையொன்றினை (SID) வடிவமைத்தல். 

* கப்பல்களுக்கு எரிபொருள் விநியோகிப்பதற்கு (Bunkering) எண்ணெய்த் தாங்கிவசதிகளை மேம்படுத்தல் வ/ப ஜயா கண்டேனர் டேர்மினல் கம்பனி 3200 மெற்றிக் தொன் கொள்ளளவுடைய எண்ணெய்த் தாங்கியை நிர்மாணித்தல். 

* இலங்கை கப்பல் கூட்டுத்தாபனத்திற்காக (CSC) கொள்வனவு செய்த இரண்டு கப்பல்களுக்காக பெற்றுக்கொள்ளப்பட்ட மக்கள் வங்கிக் கடனை மீளசெலுத்துவதற்கு திட்டமிடுதல். 

* காலிமுகத்திடலை பொதுமக்கள் விரும்பக்கூடிய சூழலாக மாற்றி செயற்படுத்தும் காலிமுகத்திடல் பசுமைச் சூழல் திட்டம். 

* வணிக கப்பற் பணியினருக்கான பயிற்சித் திட்டம். 

* கொழும்பு வடக்கு துறைமுக அபிவிருத்தித் திட்டம் - சாத்திய வளஆய்வு மேற்கொள்ளல்.

* ஜயகொள்கலன் முனையத்தை மேம்படுத்தல். 

* புளுமெண்டல் பிரதேசத்தில் உத்தேசிக்கப்பட்ட துறைமுகம் சார்ந்த சேவைகள் வழங்கல் பிரிவை அபிவிருத்தி செய்தல், திட்டமிடல். 

* கொழும்பு துறைமுகத்தில் தெற்கு ஆசிய சேவைகள் வழங்கும் நிலையமொன்றைத் திட்டமிடுதல். 

(அரசாங்க தகவல் திணைக்களம்)

3 கருத்துரைகள்:

இந்த அரசாங்கத்தின் ஒரு வருட சாதனையைப் பார்க்கும் போது நியூஸிலாந்து பிரதமர் ஜஸின்தா அர்டன் அவர்கள் நிச்சியம் தோற்றுப் போய்விட்டார் என்பது மேலே உள்ள சாதனை காட்டுகின்றது.

பச்சிளம் பாலகர்களை அவர்களின் பெற்றோர்கள் பார்த்து கதறி அழுத நிலையில் மதவெறி பிடித்த கூட்ட தீர்மானத்தை வைத்து மனம் பதற பதற பற்றி எரிய வைத்து சாதனை படைத்ததை மொட்டு மறந்து விட்டதா?

பச்சிளம் பாலகர்களை அவர்களின் பெற்றோர்கள் பார்த்து கதறி அழுத நிலையில் மதவெறி பிடித்த கூட்ட தீர்மானத்தை வைத்து மனம் பதற பதற பற்றி எரிய வைத்து சாதனை படைத்ததை மொட்டு மறந்து விட்டதா?

Post a Comment