August 04, 2021

ஒரு ஆசிரியரின், உருக்கமான பதிவு


வாழ்க்கையில் தீர்மானங்கள் முக்கியமானது, உயர் தரப் பரீட்சை முடித்தவுடன் ஏக காலத்த்தில் இரண்டு கடிதங்கள் ஒன்று அட்டாளைச்சேனை தேசிய கல்வியல் கல்லூரிற்கு தெரிவு செய்யப்பட்ட கடிதம் .அடுத்தது கொழும்பு பல்கலைக்கழகத்தின்  யூனானி மருத்துவ பீடத்திற்கு தெரிவு செய்யப்பட்ட கடிதம் .எதைத் தீர்மானிப்பது .கொழும்பு பல்கலைக்கழகம் வீட்டில் இருந்து 35 கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது அட்டாளைச்சேனை வீட்டில் இருந்து 250 Km தூரத்தில் உள்ளது .கல்வியல் கல்லூலூரி டிப்ளோமா பாடநெறி ,அடுத்தது பட்டப்படிப்பு .அதுவும் யுத்தம் நடக்கும் காலப்பகுதி எதை தீர்மானிப்பது .எனது தந்தை இரத்தினக் கல் வியாபாரி வேறு தீர்மானங்களும் எடுத்திருக்க  முடியும் இத்தனையையும் மீறி கல்விக் கல்லூரி செல்ல தீர்மானித்தமை .வாழ்க்கையில் ஒரு பெரிய தீர்மானம் .ஆசிரியர் தொழிலை விரும்பி மனப்பூர்வமாக தேர்வு செய்தேன் .

கல்லூரி முடிந்தவுடன் கொழும்பில் ஒரு பிரபல பாடசாலை அதிபர் தொடர்பு கொண்டு அங்கு வருவதற்கு எனது விருப்பக் கடித்த்தை கேட்டார் .(என்னைப் பற்றி ஒரு மிகையான Recommendation எனது கலரலூரி விரவுரையாளர் ஒருவரால் கொடுக்கப்பட்டிருந்தது.)கல்லூரியில் திறமை சித்தி என்பதால் கட்டாயம் தேசிய பாடசாலைக்கு செல்ல வேண்டிய நிர்பந்தம் .பேருவளை ,கொழும்பு இதில் எதைத் தெரிவு செய்வது .பேருவளைக்கு குறிப்பாக சீனங்கோட்டைக்கு பெரிதும் கடமைப்பட்டிருந்தேன் ஏனெனில் எனது தந்தைக்கு கஹவத்தையில் (இரத்தினபுரி) உள்ள இரத்தினக் கல் கடையை 17 வருடங்கள் எந்தக் கூலியும் இன்றி பேருவளை தனவந்தர் ஒருவர் வழங்கியிருந்தார் .எமது குடும்பம் செழிப்பாக வாழ்வதற்கு அது பெரிய உதவியாக இருந்தது .மிகுந்த விருப்பத்துடனே அல் ஹுமைசரா தேசிய பாடசாலைக்கு ஆசிரியராக சென்றேன் .

திருமணம் முடிக்க முன் 4B15=  சம்பளத்தை பெற்ற எனக்கு தொழில் வருமானம் ஒரு பெரிய சுமையாக தெரியவில்லை.

 ஆனால் 16 வருட குடும்பவாழ்க்கையில் இந்த சம்பளத்தில் வாழ்ந்தது என்பது இறை அருள் .பல்வேறுபட்ட சமூக செயற்பாடுகளில் ஈடுபட்டதால்  பெரிதாக பிரத்யேக வகுப்பு செய்யவும் நேரம் இருக்கவில்லை ,இப்போது ஓரளவு பிரத்யேக வகுப்புகள் செய்கிறேன்.

என்னிடம் ஒரு மோட்டார் சைக்கிள் இருந்தது.அதனை உயர்தர மாணவர்கள் அடிக்கடி பகிடி செய்வார்கள் Sir Bike ஐ மாற்றுங்கள் .பாவம் அவர்களுக்கு எங்களது சம்பளம் தெரியாது .Bike ஐ மாற்றுவது எப்படிப் போனாலும் Service செய்வதற்கு சில நேரம் கையில் பணம் இல்லை .அந்த Bike ஐ வாங்குவதற்கு பட்டபாடு அவர்களுக்கு தெரியாது .ஆசிரியர்களுக்கு உரிய அப்பாவி புன்னைகையுடன் சமாளிப்பது வழக்கம் .

ஒன்றாக கற்பித்த ஒவ்வொரு ஆசிரியரும் வாழ்க்கை தேவைகளை நிவர்த்தி செய்வதற்கு படும் துன்பங்களை ஒரு புத்தகமாக எழுதலாம் .ஆனால் இவை எல்லாவற்றையும் மீறிய ஒரு ஆத்ம திருப்தி இந்த தொழில் இருந்தது நல்ல சம்பளம் உள்ள வேறு தொழில்களுக்கு செல்வதற்கு சந்தர்ப்பங்கள் பல கிடைத்தும் செல்லவில்லை .

இப்போது எல்லாம் தூளாகி விட்டது சம்பளத்தை வழங்குவது எப்படிப் போனாலும் .இந்தக் கழடுகளின் வார்த்தைகள் மனதை புன்படுத்துகிறது .#இது #எங்கள் #பிரச்சினை #இல்லை என்று எப்போது பொறுப்புவாய்ந்த அமைச்சர் கூறினாரோ உணர்வு பூர்வபாக தொழிலை எடுத்த நாம் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக உணர்கிறோம் .

சம்பள உயர்வை விட எமது கெளரவம் முக்கியமானது .நாம் பணியாற்றும் போது எவ்வளவு சம்பளம் என்பது எமது உள்ளத்தில் தோன்றவில்லை .மூன்று வருடமாக இருதய நோய் உள்ள ஒரு தாயின் பிள்ளையை பல் தீட்டி விட்டதை இன்று எழுதும் வரை சக ஆசிரியர்களுக்கு கூட தெரியாது .அவன் இப்போது பெரிய இளைஞன் நல்ல தொழில் செய்கின்றான் சில மாதங்களுக்கு முன் பேருவளையில் ஒரு கடையில் டீ குடித்துக் கொண்டு இருக்கும் போது வந்தான் Sir ! எனக் கூறி அழ ஆரம்பித்தான் .நீண்ட காலம் என்பதால் எனக்கு அவனது பெயரும் மறந்திருந்தது.அவன் சொன்ன வார்த்தை  எனது இன்னும் பல ஆசிரிய நண்பர்களின் பெயர்களைக் கூறி சொன்னான் நீங்கள் எங்களைக் கை விட்டிருந்தால் எமக்கு வாழ்க்கை இல்லை .இந்த தொழிலை நாம் சம்பளத்திற்கு செய்யவில்லை .

ஒரு முறை இல்ல விளையாட்டு போட்டியில் ஒரு மாணவரின் கால் உடைந்தது .நானும் ஆசிரிய நண்பர் அஷ்கர் அஹமடும் உடனடியாக களுத்துறை வைத்தியசாலைக்கு கொண்டு சென்றோம் .பெற்றோர் மாலை 6 மணி வரை வரவில்லை இருவரும் அப்படியே பகல் உணவு கூட இன்றி வைத்தியசாலையில் இருந்தோம் மாலையில் பெற்றொர் வந்த போது எமக்கு கோபம் வரவில்லை இன்று வரை நாம் பசியில் இருந்ததை சொல்லவும் இல்லை .

இத்தகு கண்ணியமான தொழிலை அந்தக் கிழடுகள் மாசுபடுத்தி விட்டனர் .இனியும் இந்த தொழில் செய்வது கடினமானது வேறு தீர்மானங்களை நோக்கி நகர்வது தவிர்க்க முடியாதது.

எம்.என் முஹம்மத் .

0 கருத்துரைகள்:

Post a Comment