Header Ads



கொரோனா உடல்கள் தேங்கியுள்ளமை குறித்து, ஆராய விசேட குழு நியமனம்


நாட்டில் பதிவாகும் அதிகளவான கொரோனா மரணங்கள் காரணமாக தகனசாலைகளின் சேவைகளும் அதிகரித்துள்ளன.

அந்தவகையில், பேருவளை பிரதேச சபையினால் முன்னெடுக்கப்படும் அளுத்கம உள்ளிட்ட தகனசாலைகளில் பகலில் மாத்திரமின்றி இரவு வேளைகளிலும் சேவைகள் முன்னெடுக்கப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்தநிலையில், கொழும்பு தேசிய வைத்தியசாலை உள்ளிட்ட பல வைத்தியசாலைகளில் கொவிட்19 தொற்றினால் மரணிப்போரின் சரீரங்கள் தேங்கியுள்ளமை தொடர்பில் ஆராய்வதற்காக விசேட குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.

காவல்துறை பேச்சாளர் சிரேஷ்ட காவல்துறை அத்தியட்சகர் சட்டத்தரணி நிஹால் தல்துவ இதனைத் தெரிவித்துள்ளார்.

உதவி காவல்துறை அத்தியட்சகர் அடங்கிய விசேட குழுவொன்றே இவ்வாறு நியமிக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

No comments

Powered by Blogger.