Header Ads



நாங்கள் நெருக்கடியில் இருக்கிறோம், எரிபொருளை சிக்கனமாக பயன்படுத்துங்கள்


அத்தியாவசியமான மருந்துகள் மற்றும் தடுப்பூசிகளை கொண்டு வருவதற்கு  வெளிநாட்டு நாணயத்தை சேமிப்பதற்காக எரிபொருளை சிக்கனமாக பயன்படுத்துமாறு வலுசக்தி அமைச்சர்  உதய கம்மன்பில பொதுமக்களிடம் வேண்டுகோள் விடுத்தார்.  

அவர் பதிவிட்டுள்ள டுவிட்டர் செய்தியிலேயே மேற்கண்ட விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாங்கள் வெளிநாட்டு நாணய நெருக்கடியில் இருக்கிறோம் என்பதே உண்மை  என்று பதிவிட்டுள்ள அவர்,  இந்த ஆண்டின் கடந்த ஆறு மாதங்களில் எரிபொருள் எங்கள் இறக்குமதியில் 18% ஆக இருந்தது, அடுத்த ஆறு மாதங்களில் இது 25% ஆக இருக்கலாம் என்றும் அதில் குறிப்பிட்டுள்ளார்.

1 comment:

  1. பாராளுமன்றத்தில் உள்ள 225 பேரின் பெற்றோல் செலவைக்கட்டுப்படுத்தி அவற்றை தன் சொந்த செலவில் பாவிக்கச் சொன்னால் நாட்டில் பெற்றோலுக்காகச் செலவாகும் கோடான கோடி ரூபாக்களை மச்சம் பிடிக்கலாம். பொதுமக்கள் பாவிப்பது முச்சக்கர வண்டி அதற்கு மிகக்குறைந்த அளவு தான் செலவாகும்.

    ReplyDelete

Powered by Blogger.