Header Ads



எம்.என்.ஜூனைத்தும், முஸ்லிம் சமூகத்திற்கு ஆற்றிய முக்கிய சில பணிகளும்..!!


- Ashroff Shihabdeen -

முன்னாள் உள்நாட்டு நிர்வாக அமைச்சின் செயலாளராகக் கடமையாற்றி ஓய்வு பெற்ற எம்.என்.ஜூனைத் காலமானார். 

ஜூனைத் அவர்கள் நிர்வாகத்துறையில் பெயர் பெற்ற முஸ்லிம் கல்விமான்களில் ஒருவராவார். ஹம்பாந்தோட்டையைப் பிறப்பிடமாகக் கொண்டவர்.

உள்நாட்டு நிர்வாக அமைச்சின் செயலாளராக அவர் கடமை புரிந்த போது குறிப்பிடத்தக்க இரண்டு முக்கியமான விடயங்களை அவர் ஆற்றியிருக்கிறார் என்று அறிய வந்திருக்கிறேன்.

01. நீண்ட காலமாக முஸ்லிம்களின் பிறப்புச் சான்றிதழ்களில் இனம் “லங்கா மரக்கல“ என்று குறிப்பிடப்பட்டு வந்ததை “லங்கா யோனக“ என்று மாற்றியமைத்தது.

02. அரச ஊழியர்களுக்கான - குறிப்பாக ஷிப்ட் அடிப்படையில் வேலை செய்யும் முஸ்லிம் ஊழியர்கள் ஸஹர், நோன்பு துறத்தல், தராவீஹ் ஆகிய வேளைகளில் அவற்றுக்காகத் தற்காலிக விடுப்பு அனுமதிக்கான சட்டபூர்வ சுற்று நிருபம் வெளியிட்டமை.

இதற்கப்பால் பலரும் அறிந்திராத சமூகப் பணிகளை மிகவும் அமைதியாகப் புரிந்து விட்டு அமைதியாகவே வாழ்ந்து வந்தவர். நிறைய அரச அலுவலர்கள், அதிகாரிகளுக்கு உதவிகள் புரிந்தவர். 

பல மொழிகள் அறிந்தவர். அவரைச் சந்திக்க ஒரு முறை சென்ற போது தாய்லாந்துக்காரர் ஒருவருடன் அவர் தாய்லாந்து மொழியில் பேசியதை நான் கண்டிருக்கிறேன்.

இன்றைய முஸ்லிம் நிர்வாக, உயர் அதிகாரிகள் அவர் பற்றித் தேடியறிந்து அவரை முன்மாதிரியாகக் கொள்வது முக்கியமானது.

1 comment:

  1. His death is a irreparable loss to our Muslim community.He rendered his service irrespective race, religion,caste and language. He was prepared to help anybody any time.Whatever government came into power, he was given top priority and due place.He was never sidelined by any Government because of his excellent efficiency and best administrative skills.He was one of the legendaries in the administrative service. May Almighty
    Allah grant him Jannathul Firdous in the Akhir. My deepest sympathies to his whole family.

    ReplyDelete

Powered by Blogger.