Header Ads



எரிபொருளுக்கு தட்டுப்பாடு ஏற்படுமென தெரிவித்தவர் கைது


எரிபொருள் நிலைமை தொடர்பில் சர்ச்சைக்குரிய கருத்தை வெளியிட்ட இலங்கை பெற்றோலிய பொது சேவையாளர் சங்கத்தின் இணைப்பாளர் ஆனந்த பாலித்த குற்றப் புலனாய்வு திணைக்களத்தினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

காவல்துறை ஊடக பேச்சாளர் அலுவலகம் இதனை தெரிவித்துள்ளது.

நாட்டில் எதிர்வரும் நாட்களில் எரிபொருளுக்கு தட்டுப்பாடு ஏற்படக்கூடிய நிலை உருவாகியுள்ளதாக அவர் நேற்று முன்தினம் தெரிவித்திருந்தார்.

தற்போது 11 நாட்களுக்கு போதுமான டீசல் இருப்பில் உள்ளதாகவும் 10 நாட்களுக்கு போதுமான பெற்றோல் மாத்திரமே இருப்பதாக அவர் குறிப்பிட்டிருந்தார்.

இதற்கிடையில், நாட்டில் எந்தவொரு எரிபொருள் தட்டுப்பாடும் இல்லை என எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பில ட்விட்டர் பதிவொன்றின் ஊடாக நேற்று தெரிவித்தார்.

ஏதாவதொரு வகையில் நாட்டில் எரிபொருள் பற்றாக்குறை நிலவுமாயின் தான் அதுதொடர்பில் பொதுமக்களுக்கு அறியத்தருவதாகவும் அமைச்சர் தனது ட்விட்டர் பதிவில் அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments

Powered by Blogger.