Header Ads



எரிவாயுவுக்கு தட்டுப்பாடு எனும் பேச்சுக்கே இடமில்லை - இராஜாங்க அமைச்சர்


லாப் எரிவாயு நிறுவனம் புதிய விலையின் கீழ் இன்றிலிருந்து விநியோகத்தை ஆரம்பித்துள்ளது. எனவே, இன்று திங்கட்கிழமை முதல் எரிவாயு பிரச்சினை காணப்படாது. தேவையான எரிவாயுவை சந்தையில் தட்டுப்பாடின்றி மக்களால் பெற்றுக்கொள்ள முடியும் என நுகர்வோர் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் லசந்த அலகியவன்ன தெரிவித்துள்ளார்.

லாப் எரிவாயு நிறுவனம் கடந்த நாட்களில் தனது உற்பத்திகளை நிறுத்தியதால் உள்நாட்டு சந்தையில் எரிபொருளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டது.

ஆனால், இன்று (23) திங்கட்கிழமை முதல் தட்டுப்பாடின்றி எரிவாயுவை மக்கள் பெற்றுக்கொள்ள முடியும் என்றார்.

லிட்ரோ மற்றும் லாப் எரிவாயு நிறுவனங்களுக்கு கண்காணிப்பு விஜயத்தை மேற்கொண்டிருந்த நுகர்வோர் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் லசந்த அலகியவன்ன, ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே மேற்கண்டவாறு குறிப்பிட்டிருந்தார்.

அவர் தொடர்ந்தும் கூறுகையில், லாப் எரிவாயு நிறுவனம் கடந்த நாட்களில் தனது உற்பத்திகளை நிறுத்தியதால் உள்நாட்டு சந்தையில் எரிபொருளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டது.

அதே போன்று லிட்ரோ நிறுவனம் முன்னைய விலைக்கே எரிவாயுவை விற்பனை செய்து வருகிறது.

No comments

Powered by Blogger.