Header Ads



கொரோனா உயிரிழப்பு அதிகரித்தால், பேக்கரிகளில் உடல்களை எரிக்க நேரிடும் - ஆனந்த தேரர்


கொரோனா தொற்றால் மரணிப்போரின் எண்ணிக்கை அதி கரித்தால் கொழும்பு கல்லறை போதாது என்றும் நாட்டில் தற் போதுள்ள பாண் வெதுப்பகங்களில் சடலங்களைத் தகனம் செய்ய நேரிடும் எனவும் முருத்தெட்டுவே ஆனந்த தேரர் தெரிவித்துள்ளார்.

நாட்டில் தற்போது கொரோனா தொற்று பொதுமக்களின் கொத் தணியாக உருவாகியுள்ளது. கொரோனா தொற்றால் மரணிப் போரின் நிலைமை இதே போன்றே நீடித்தால் அவர்களின் உட லைத் தகனம் செய்யக் கொழும்பு கல்லறை போதாது என்றும் நாட்டில் தற்போதுள்ள பாண் வெதுப்பகங்களில் சடலங்களைத் தகனம் செய்ய நேரிடும் எனவும் ஆனந்த தேரர் தெரிவித்துள்ளார்.

கொரோனா தொற்றை ஒடுக்குவது தொடர்பாக அரசாங்கமும் மற்ற அதிகாரிகளும் செய்த ஊடக நிகழ்ச்சிகள் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும் என்றும், நாட்டை சரியான நேரத்தில் மூடா மல் தற்போது நாட்டை மூடுவது குறித்த பேசுவது பயனற்றது எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

நாட்டில் தற்போது முன்னெடுக்கப்படும் அபிவிருத்தி நடவடிக் கைகளைக் கூட இடைநிறுத்திவிட்டு, கொரோனா தொற்றைக் கட்டுப்படுத்துவதற்கு முன்னுரிமை வழங்க வேண்டும் எனவும் முருத்தெட்டுவே ஆனந்த தேரர் தெரிவித்துள்ளார்.

3 comments:

  1. Too late Saadu,
    Api thamai Honthatama Karala Thiyanne.

    ReplyDelete
  2. சொல்பவரை எரிக்கும் போது விளங்கும்.

    ReplyDelete
  3. வெதுப்பகம்

    ReplyDelete

Powered by Blogger.