Header Ads



முஜிபூர், ஹரீன், மனுஸ தமது ஒருமாத சம்பளத்தை கொவிட் நிதியத்திற்கு வழங்கினர் - ஏனையவர்களும் வழங்கத் தீர்மானம்


கொவிட் நிதியத்திற்கு தங்கள் ஒருமாத சம்பளத்தை வழங்குவதற்கு ஐக்கிய மக்கள் சக்தி எம்பிக்கள் தீர்மானம்

ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தங்கள் ஒருமாத  சம்பளத்தை கொவிட் நிதியத்திற்கு வழங்க தீர்மானித்துள்ளனர்.

எதிர்கட்சி தலைவர் ஆரம்பிக்கவுள்ள விசேட நிதியத்திற்கு தங்கள் ஒருமாத கால சம்பளத்தை வழங்குவதற்கு தீர்மானித்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் ஹரீன்பெர்ணான்டோ தெரிவித்துள்ளார்.

தனது சம்பளத்தை ஏற்கனவே வழங்கியுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார், நாடாளுமன்ற உறுப்பினர்கள் மனுஸ நாணயக்கார முஜிபூர் ரஹ்மான் ஆகியோரும் தங்கள் ஒருமாத சம்பளத்தை ஏற்கனவே வழங்கியுள்ளனர்.

No comments

Powered by Blogger.