Header Ads



பண்டைய மன்னர்களின் அடிச்சுவடுகளைப் பின்பற்றி, நானும் சேவைசெய்ய அர்ப்பணிப்புடன் உள்ளேன் - ஜனாதிபதி


புனித தலதா பெரஹரா வெற்றிகரமாக நடைபெற்று நிறைவு பெற்றுள்ளதை அறிவிக்கும் செய்தியை கையளிக்கும் நிகழ்வில் ஜனாதிபதி ஆற்றிய உரை

2021-08-23

ஜனாதிபதி மாளிகை - கண்டி

தியவடன நிலமே நிலங்க தேல அவர்களே,

நான்கு பிரதான தேவாலயங்கள் உட்பட ஏனைய தேவாலயங்களின் நிலமேமார்களே,

நகரபிதா அவர்களே,

ஜனாதிபதியின் செயலாளர் தலைமையிலான அரச அதிகாரிகளே,

அதிதிகளே,

ஸ்ரீ தலதா பெரஹராவை பண்டைய மரபுகள் மற்றும் பாரம்பரியங்களுக்கு ஏற்ப, இந்த ஆண்டும் நடத்தக் கிடைத்தமை அனைத்து பௌத்த மக்களுக்கும் மிகுந்த பக்திபூர்வமான மகிழ்ச்சியை அளிக்கிறது.

இந்த உன்னத நிகழ்வின் நிறைவைக் குறிக்கும் வகையில், இங்கு வருகைதந்துள்ள ஸ்ரீ தலதா மாளிகையின் தியவடன நிலமே மற்றும் நான்கு பிரதான தேவாலயங்கள் உட்பட ஏனைய தேவாலயங்களின் பஸ்நாயக்க நிலமேமார்களை, அனைத்து பௌத்த மக்களின் சார்பாக, நான் அன்புடன் வரவேற்கிறேன்.

தலதா புனித தந்தத்துக்காக நடத்தப்படும் இந்தா் புன்னிய நிகழ்வின் செல்வாக்கு, கௌரவம் மற்றும் தனித்துவத்தைப் பாதுகாத்து, தற்போதைய சுகாதார விதிமுறைகளுக்கு இணங்க, பெரஹர நிகழ்வுக்கு தமது ஆசீர்வாதங்களையும் வழிகாட்டுதல்களையும் வழங்கிய மல்வத்தை பீடத்தின் மஹாநாயக்க தேரர் சங்கைக்குரிய திப்படுவாவே ஸ்ரீ சுமங்கள நாயக்க தேரர், அஸ்கிரிய பீடத்தின் மஹாநாயக்க தேரர் சங்கைக்குரிய வரகாகொட ஸ்ரீ ஞானரதன தேரர், மற்றும் அனுநாயக்க தேரர்கள் உள்ளிட்ட மஹா சங்கத்தினர்களை நான் இச்சந்தர்ப்பத்தில் மிகுந்த மரியாதையுடன் நினைவுகூர்கிறேன்.

நாட்டின் முன் எத்தகைய சவால்கள் மற்றும் தடைகள் இருந்தாலும், நாம் விட்டுக்கொடுக்க முடியாத பல தேசிய பொறுப்புகளும் கடமைகளும் எம்மிடம் உள்ளன என்பதை நாங்கள் அறிவோம். அதில் முதலாவது இடம், புனித தந்தத்துக்காக நடத்தப்படும் அர்ப்பணிக்கப்பட்ட புனித கிரியைகளுக்குச் சொந்தமானது என்பதை, பழங்காலத்திலிருந்தே எமது ஆட்சியாளர்கள் நம்பினார்கள். அவர்கள் அந்தப் பாரம்பரியத்தை யுகம் யுகமாகப் பொறுப்பளித்தனர். பண்டைய மன்னர்கள்  நாட்டின் அனைத்துத் தலைவர்களின் அடிச்சுவடுகளைப் பின்பற்றி, நானும் புனித தந்தத்துக்காகச் செய்ய வேண்டிய கௌரவங்களுக்கு அர்ப்பணிப்புடன் உள்ளேன்.

ஓர் அரசாங்கம் என்ற வகையில், கடந்தகால பாரம்பரியத்தைத் தொடர்ச்சியாக முன்னெடுத்த மகிழ்ச்சியை நாம் அடைகிறோம். எங்கள் மதிப்புக்குரிய மஹா சங்கத்தினரின் வழிகாட்டுதலுக்காகவும் பண்டைய மன்னர்களால் பாதுகாக்கப்பட்ட பாரம்பரியத்துக்காகவும், நாம் அனைவரும் எம்மை அர்ப்பணித்துள்ளோம்.

நிலமேமார்களே, விசேட அதிதிகளே,

புனித தந்ததாதுக்காகச் செய்யப்படும் அர்ப்பணிப்புகளை, நாட்டுக்காகவும் தேசத்துக்காகவும் செய்யும் அர்ப்பணிப்புகளாகவே நாங்கள் கருதுகிறோம். வரலாறு நெடுகிலும் நாடு எடுத்த ஒவ்வொரு வெற்றிகரமான நடவடிக்கையிலும், புனித தந்தத்தின் பாதுகாப்பு இருந்தது என்று நாங்கள் நம்புகிறோம். 

புனித தந்தத்துக்காக நடத்தப்பட்ட இந்த மகத்தான பெரஹரா நிகழ்வுக்காக, இந்த ஆண்டும் கடுமையாக உழைத்த கலைஞர்கள் உட்பட அனைவருக்கும், எங்கள் நன்றியையும் பாராட்டுக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

உங்கள் அனைவருக்கும் புனித தந்தத்தின் ஆசிகள் கிட்டுமாக!

1 comment:

  1. ஞானக்காவின் வழிகாட்டலின் பேரில்,அவளுடைய வசனத்தை நூற்றுக்கு நூறு பின்பற்றி நான் நாட்டை மிகவும் முன்னேற்றப்பாதையில் கொண்டு செல்வேன்.அந்தவழியில் நாட்டுக்குப் பணம் தேவைப்படும் போது அரசாங்க ஊழியர்கள் அனைவருடைய சம்பளத்தையும் அரைவாசியாகக் குறைப்பதற்கும் தயங்கமாட்டேன்.அ்து தான் முன்னேற்றத்தின் சரியான அடையாளம்.

    ReplyDelete

Powered by Blogger.